மகிந்தவின் ஆட்கள் போல எங்கள் போராட்டத்தில் குடித்துவிட்டு, மின் கம்பத்தில் ஏறவில்லை – ஹர்ஷ டி சில்வா
ஐக்கிய தேசிய கட்சி முன்னெடுத்த, ஜனாதிபதி மற்றும் புதிதாக நியமிக்கப்பட்ட பிரதமருக்கு எதிரான போராட்டம் வெற்றி பெற்றுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
அத்துடன் குறித்த எதிர்ப்பு போராட்டத்திற்கு வருகை தந்த மக்களுக்கும் மிக நன்றி எனவும் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் அவர் தனது டுவிட்டரில் பதிவிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் கூறியிருப்பதாவது, “குறித்த போராட்டத்திற்கு வருகை தந்த பத்து ஆயிரம் பொது மக்களுக்கும் நன்றிகள். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் ஒழுங்காக இருந்தார்கள், குடித்துவிட்டு, மின் கம்பத்தில் ஏறவில்லை.
அவர்கள் ஜனநாய ரீதியாக நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டும் என்றும், போலி பிரதமருக்கு எதிராகவுமே திரண்டனர். இந்த போராட்டம் எமக்கு மிகப் பெரிய வெற்றி” என பதிவிட்டுள்ளார்.