மகிந்தவின் புதல்வர்களின் பொதியைக் காவிய இலங்கைத் தூதுவருக்கு ஏற்பட்டுள்ள நிலை ! இது தேவை தானா மங்குனி தூதுவரே?

0

மகிந்த ராஜபக்சவின் இரண்டு புதல்வர்களையும், கட்டார் விமான நிலையத்தில் வரவேற்று அவர்களின், பயணப் பொதிகளைக் காவிச் சென்ற கட்டார் நாட்டுக்கான இலங்கைத் தூதுவர் ஏஎஸ்பி லியனகேயை திருப்பி அழைக்குமாறு ஜனாதிபதிக்கு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

கடந்த வியாழக்கிழமை கட்டார் விமான நிலையத்தைச் சென்றடைந்த மகிந்த ராஜபக்சவின் புதல்வர்களான யோசித ராஜபக்ச மற்றும் றோகித ராஜபக்ச ஆகியோரைக் கட்டாருக்கான இலங்கைத் தூதுவர் ஏஎஸ்பி லியனகே வரவேற்று அவர்களின் பயணப் பொதிகளைக் காவிக் கொண்டு சென்றார்.

இது தொடர்பான ஒளிப்படங்கள் வெளியானதையடுத்து அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகள் ஏற்பட்டுள்ளன.

சில அமைச்சர்கள் கட்டாருக்கான தூதுவரின் இந்தப் படங்களை ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

யோசித ராஜபக்ச, யோசித ராஜபக்ச ஆகியோரின் பயணப் பொதிகளைக் காவியதன் மூலம் ஒட்டுமொத்த அரசாங்கத்தையும் ஏஎஸ்பி லியனகே அவமானத்துக்கு உள்ளாக்கி விட்டதகாவும் அவர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

அத்துடன், அவரை நாட்டுக்குத் திருப்பி அழைக்குமாறும் அழுத்தங்களை வழங்கியுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.