மனைவியை பியர் மழையில் நனைய வைத்த கணவன் ! வினோத சம்பவம்

0

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் மைனே என்ற இடத்தில் மனைவியை கணவர் தூக்கி சுமக்கும் போட்டி நடத்தப்பட்டது. 834 அடி தூரம் மனைவியை தூக்கி சுமந்து முதலில் வரும் கணவர் வெற்றிபெற்றவராக அறிவிக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி நேற்று இப்போட்டி நடந்தது. அதில் 30 ஜோடி கணவன்-மனைவி பங்கேற்றனர். அதில் ஜெசிவால்-கிறிஸ்டின் ஆர் செனால்ட் ஜோடி வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.

வெற்றிபெற்ற இந்த ஜோடிக்கு பரிசாக ‘பீர்’ வழங்கப்பட்டது. அதுவும் ஜெசிவாலின் மனைவி கிறிஸ்டின் ஆர்செனால்ட் டின் எடைக்கு நிகரான ‘பீர்’ பரிசளிக்கப்பட்டது. மேலும் ஆர்செனால்டின் எடையை போன்று 5 மடங்கு தொகை பணமும் பரிசாக வழங்கப்பட்டது.

இந்த போட்டியில் ஜெசிவால்-கிறிஸ்டின் ஆர்செனால்ட் தம்பதி 2-வது முறையாக வெற்றிபெற்றுள்ளனர். பின்லாந்தில் நடைபெற உள்ள உலக சாம்பியன் ஷிப் போட்டியில் பங்கேற்க உள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.