கட்டாருக்கான ஶ்ரீலங்கா தூதுவர் ஏ.எஸ்.பி.லியனகே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரு புதல்வர்களையும் கட்டார் விமான நிலையத்துக்குச் சென்று வரவேற்றுள்ளார்.
அத்துடன் அவர்கள் கொண்டு சென்ற பயணப் பொதிகளையும் தூதுவரும், தனசூரிய என்பவரும் பெற்றுக்கொண்டு ஹொட்டலுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இந்த விடயம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மஹிந்தவின் இரு புதல்வர்களும் அரசில் எந்தவித முக்கிய பதவிகளையும் வகிக்காத நிலையில் தூதுவரின் இந்தநடவடிக்கை இராஜதந்திர நடைமுறைகளுக்கு முரணானது என விமர்சிக்கப்பட்டுள்ளது.
றக்பி போட்டி ஒன்றுக்காக அவர்கள் காட்டருக்குச் சென்றிருந்தபோதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கட்டாருக்கான ஶ்ரீலங்கா தூதுவர் முன்னாள் ஜனாதிபதியின் நெருங்கிய நபர் என்பதுடன் தனசூரிய அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு நெருங்கிய நபர் என்பதும் குறிப்பிடத்தக்கது.