மிளகாய் பொடியுடன் அலையும் நடிகை மும்தாஜ் ! காரணம் என்ன ?

0

மீ டூ விவகாரம் சினிமாத்துறையில் புயலாய் மாறியுள்ளது. வைரமுத்துவிடம் துவங்கி, சுசி கணேசன், அர்ஜுன் என பலர் மீதும் பாலியல் புகார்கள் கூறப்பட்டு வருகிறது. இது குறித்து மும்தாஜ் பேட்டி அளித்துள்ளார்.

மும்தாஜ் கூறியுள்ளது பின்வருமாறு, மீ டூ என்ற பெயரில் திரைத்துறையில் இருப்பவர்கள் இப்படி செய்தார்கள். அப்படிச் செய்தார்கள் என்றெல்லாம் சொல்லுகிறார்கள்.

தனியா வாங்களேன். கொஞ்சம் பேசணும் என்று ஒருவர் சொன்னால், நாம்தான் யோசிக்க வேண்டும். தனியே வரச்சொல்லி என்னிடமும் சொல்லியிருக்கிறார்கள். நான் அப்படி பார்ப்பதை தவிர்த்திருக்கிறேன்.

சில தருணங்களில் விழாக்களுக்கோ, படப்பிடிப்புக்கோ நான் மட்டுமே போகக்கூடிய சூழல் வரும்போது, என்னுடைய அம்மா, மிளகாய் பொடியை ஒரு பேப்பரில் மடித்து, என்னிடம் தருவார். தப்பா ஏதாவது நடந்துச்சுன்னா, உடனே மிளகாய் பொடியைத் தூவிடுன்னு கொடுத்திருக்காங்க. அப்போதெல்லாம், பெப்பர் ஸ்ப்ரே வரவில்லை என தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.