மீள்குடியேற்ற அமைச்சராக மகிந்தவின் துணை ஆயுதக்குழு துரோகி டக்ளஸ்!

0

மீள்குடியேற்றம், இந்துவிவகார மற்றும் வடக்கு அபிவிருத்தி அமைச்சராக மகிந்தவின் துணை ஆயுதக் குழு தலைவர் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்படவுள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.நல்லாட்சி அரசாங்கம் பிளவடைந்து, இலங்கையின் புதிய பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இலங்கையின் புதிய அமைச்சரவை அறிவிக்கப்படவுள்ளது. அதில் குறிப்பாக ஐந்து முக்கிய அமைச்சுப் பொறுப்புக்கள் இன்று மாலை வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன் பிரகாரம் மீள்குடியேற்றம், இந்துசமய விவகாரம் மற்றும் வடக்கு அபிவிருத்தி அமைச்சுப் பதவி டக்ளஸ் தேவானந்தாவிற்கு வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

குறித்த பதவியை ஏற்கனவே ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான டி.எம்.சுவாமிநாதன் வகித்து வந்திருந்த நிலையில் தற்போது அதில் மாற்றம் ஏற்படுத்தப்படவுள்ளது.

இதேவேளை, பிரதமராக மஹிந்தவை நியமித்தமை அரசியலமைப்பிற்கு முரணானதென்றும், நாடாளுமன்றத்தை உடன் கூட்டுமாறும் ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கடந்த காலத்தில் மகிந்த ராஜபக்சவுடன் இணைந்து செயற்பட்ட துணை ஆயுதக் குழு தலைவர் டக்ளஸ் தேவானந்தா தமிழ் மக்களுக்கு எதிரான பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.