மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்ததின நிகழ்வு முல்லைத்தீவு நகரில் அமைந்துள்ள மகாத்மா காந்தி நினைவுத்தூபியில் இன்று(செவ்வாய்கிழமை) நடைபெற்றுள்ளது.
இந்திய தூதரகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் யாழ்ப்பாணத்தின் இந்திய துணைத்தூதரகத்தின் உயர் அதிகாரி எஸ்.நிறஞ்சன் மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் இரவீந்திரன் மற்றும் கெங்காதாரன் ஆகியோர் கலந்துகொண்டு மலர் மாலை தூவி அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
தொடர்ந்து நகரிலுள்ள மாவீரன் பண்டாரவன்னியன் சிலைக்கும் இதன்போது மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், மகாத்மா காந்தியின் பிறந்த தினத்தினை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தினை சேர்ந்த 100 வயோதிபர்களுக்கு புடவைகளும் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.