மூன்று கோடி பேஸ்புக் பயனாளர்களின் தகவல் திருட்டு ! பறிபோகும் பாதுகாப்பு

0

பேஸ்புக்கில் சுமார் 3 கோடி பயனாளர்களின் விவரங்கள் திருடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலக அளவில் பல அமோக வலைத்தளங்கள் இயங்கி வந்தாலும் அனைத்திலும் முன்னிலையில் இருப்பது முகநூல் மட்டும் தான் என்ற கூறலாம். அமெரிக்காவைச் சார்ந்த சக்கர்பெர்க் என்பவர் கடந்த 2004-ம் முகநூலை அறிமுகம் செய்தார். உலக மக்களிடையே பெரும் பங்கை வைக்கிறது இந்த முகநூல்.

சமீபத்தில் ஃபேஸ்புக் நிறுவனம் பயனர்களின் தகவலை மூன்றாம் நபர்களிடம் பகிர்வதாக தகவல்கள் வெளியாகி பல சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் உலக அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது மட்டுமல்லாது தாக்கத்தையும் ஏற்படுத்தியது. இது குறித்து ஃபேஸ்புக் நிறுவனம் தொடர்ந்து பதில் தெரிவித்து வந்தது. இந்நிலையில், ஃபேஸ்புக்கை பயன்படுத்தும் 9 கோடி பயனர்களின் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஃபேஸ்புக் பயன்படுத்தும் 9 கோடி பயனர்களின் கணக்குகளின் தரவுகளை, அடையாளம் தெரியாத நபர்கள் ஹேக் செய்துள்ளனர் என்று அந்நிறுவனத்தின் தலைவர் மார்க் சக்கர்பெர்க் சென்ற மாதம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், அப்படி ஹேக் செய்யப்பட்டதில் 2.9 கோடி கணக்குகளின் தரவுகள் திருடப்பட்டுள்ளதாக ஃபேஸ்புக் தற்போது அதிர்ச்சித் தகவலை கூறியுள்ளது.

இது குறித்து ஃபேஸ்புக் நிறுவனம், ‘ஒரு புதிய பக்-ஐ ஹேக்கர்கள் உருவாக்கியதன் மூலம், 1.5 கோடி பயனர்களின் பெயர், போன் நம்பர் மற்றும் மின்னஞ்சல் முகவரிகளை திருடியுள்ளனர். இதுவல்லாமல், 1.4 கோடி பயனர்களின் கணக்குகள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளன. அவர்கள் வசித்து வரும் இடம்இ பிறந்த தேதி உள்ளிட்ட மிகவும் சென்சிட்டிவ் தகவல்களை ஹேக்கர்கள் திருடியுள்ளனர்’ என்று விளக்கம் அளித்துள்ளது.

இந்த விவரங்களை ஹேக்கர்கள் டிஜிட்டல் லாகின், பாஸ்வேர்டுகள் மூலம் திருடியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பான விசாரணையை அமெரிக்கப் புலனாய்வு நிறுவனமான எப்பிஐ மேற்கொண்டுள்ளதாகவும், இந்த விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருவதாகவும் பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.