மேற்கிந்திய தீவுகளுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் ரன் மெசின் விராட் கோலி சதம் அடித்து அசத்தல் !

0

இந்தியாவுக்கு வந்துள்ள மேற்கிந்தியத்தீவுகள் கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது . இதன் முதலாவது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நேற்று ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது .

போட்டியின் இரண்டாவது நாளான இன்று இந்திய அணியின் தலைவர் விராட் கோலி சற்று முன்னர் சதம் விளாசியுள்ளார் .இதில் 7 நான்கு ஓட்டங்களும் உள்ளடக்கம் . டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி பெற்றுக்கொண்ட 24 வது சதம் இதுவாகும் .

நேற்றைய முதலாம் நாள் ஆட்டம் முடிவடைந்த போது இந்திய அணி 4 விக்கெட்டுக்கு 364 ரன்கள் எடுத்திருந்தது. பிரித்வி ஷா சதமும், புஜாரா, கோலி அரைசதமும் விளாசினர்.போட்டியின் இரண்டாம் நாளான இன்று 5 விக்கெட் இழப்புக்கு 488 ஓட்டங்களை இந்தியா பெற்றுள்ளது .

மேற்கிந்திய தீவுகளின் பிஷோ வீசிய பந்தில் சற்று முன்னர் ரிஷபி பான்ட் ஆட்டமிழந்துள்ளார் .இவர் 84 பந்துகளை எதிர்கொண்டு அதிரடியாக ஆடி 4 ஆறு ஓட்டங்கள் 8 நான்கு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 92 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார் .

தற்போது விராட் கோலி 109 ஓட்டங்களுடனும் ரவீந்திர ஜடேஜா 6 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர் ,

Leave A Reply

Your email address will not be published.