யார் இந்த ரெஹானா பாத்திமா? வெளியாகும் பகீர் தகவல்கள்! (வீடியோ இணைப்பு)

0

அனைத்து வயதுடைய பெண்களையும் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள்ளாக அனுமதிக்க வேண்டுமென உச்ச நீதிமன்ற தீர்ப்பினை தொடர்ந்து நேற்றைய தினம் நடைதிறக்கப்பட்ட நிலையில் கேரளா முழுவதும் பரபரப்பு நிலவிவருகிறது.

கேரள அரசின் நோக்கம் பக்தர்களின் உரிமைகளை பாதுகாப்பதே தவிர போராட்ட எண்ணமுடையவர்களை கோவிலுக்குள்ளாக அனுமதிப்பதல்ல என்ற அறிவிப்பு இன்று காலை கேரள அரசின் சார்பாக வெளியிடப்பட்டது. திடீரென கேரள அரசு இவ்வாறு அறிவித்தது ஏன்? என்ற ஐயம் அனைவரின் மத்தியிலும் கிளம்பியது.

கேரள அரசு அவ்வாறான அறிவிப்பினை வெளியிட காரணம் ரெஹானா பாத்திமா என்ற பெண். கிஸ் ஆப் இந்தியா என்ற அமைப்பை சேர்ந்த இவர் முன்னதாக, ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் திருச்சூர் புலிக்கலி என கூறப்படும் பாரம்பரிய புலி நடனத்தின் 2016 ஆம் ஆண்டு முதல் பெண்ணாக கலந்து கொண்டுள்ளார். 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற முத்த போராட்டத்திலும் கலந்து கொண்டு முன்னிலை வகித்து உள்ளார்.ரெஹானா தீவிர மரபுவழி முஸ்லீம் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கேரள திரைத்துறையை சேர்ந்த ஒருவருடன் திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்துவருகிறார்.

இவர் சபரிமலைக்கு செல்வதற்கான உடைகளுடன் ஆபாச புகைப்படத்தை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளதுடன் சபரிமலைக்கு முறையான விரதமிருந்து செல்லும் பக்தர்களை நோகடிக்கும் வகையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பினை தவறாக பயன்படுத்தி செல்ல முயல்கிறார் என்ற தகவல்கள் கேரள அரசுக்கு கிடைத்ததன் காரணத்தினாலேயே, ” குறிப்பிட்ட நோக்கத்துடன் வரும் எவரையும் அனுமதிக்க முடியாது ” என அறிவிப்பு வெளியிட்டது என்கின்றனர் அம்மாநில காவல்துறை உயரதிகாரிகள்.

முன்னதாக, இஸ்லாமிய பெண்ணொருவர் உச்ச நீதிமன்ற பெண்ணை பயன்படுத்தி இந்து மத நம்பிக்கைகளை சிதைக்க முயல்வதனைப்போல, இந்து மத பெண்கள் புர்கா அணியாமல் தொழுகைகளில் கலந்துகொள்ள முயல்வார்களா? முயன்றால் அந்த மதத்தினர் ஏற்பார்களா? அதற்கும் காவல்துறை அனுமதி கொடுக்குமா? என ஆவேசப்படுகின்றனர் அம்மாநில பொதுமக்களும்.

Leave A Reply

Your email address will not be published.