யாழ்ப்பாணத்தில் ஆசிரியரின் வீட்டிற்குள் நுழைந்து அட்டகாசம் புரிந்த வாள் வெட்டு குழு ! நகைகள் ,பணம் கொள்ளை

0

யாழ்ப்பாணம் தென்மராச்சி மீசாலை புத்தூர்ச்சந்தி கமநலசேவைகள் திணைக்களத்திற்கு பின்புறமாக உள்ள ஆசிரியர் ஒருவரின் வீட்டிற்குள் வாள்களுடன் நுழைந்த முகமூடிக் கொள்ளையர்கள் அட்டகாசத்தில் ஈடுபட்டுவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.சுமார் ஒரு மணி நேரம் வரை வீட்டில் நின்ற கொள்ளையர்கள் கூக்குரல் கேட்டு வந்த அயலவர்களையும் அச்சுறுத்தியுள்ளனர்.

ஆறு பேர் வீட்டிற்குள் நுழைந்து வாள்களை காட்டி அச்சுறுத்தி தாலிக்கொடி உட்பட சுமார் 18 பவுண் நகைகள், 4000 ரூபா ரொக்கப்பணம் என்பவற்றையும் கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.நேற்று அதிகாலை 12.00 மணியளவில் வாள்களுடன் முகத்தை துணியினால் முற்றாக மூடியவாறு சுமார் பத்துக்கும் அதிகமானவர் மதில் பாய்ந்து வீட்டிற்குள் நுழைந்துள்ளனர்.

வீட்டின் யன்னல் ஊடாக வாள்களை காட்டி கதவைத் திறக்குமாறு அச்சுறுத்தியுள்ளனர்.இதன்போது வீட்டிலிருந்தவர்கள் கூக்குரலிட கதவினை உடைத்துக்கொண்டு குறித்த கும்பல் உள்நுழைந்துள்ளது.குறித்த சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸாருக்கு அறிவித்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.