யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மாணவிகள் மீது பாலியல் துன்புறுத்தல் செய்யும் காமுக பேராசியரை தண்டிக்காமைக்கு காரணம் நீதிமன்றம் – பதிவாளர்

0

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவிகள் மீது பாலியல் துன்புறுத்தல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில், பேராசிரியர் ஒருவருக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில், அவருக்கு எதிராக பல்கலைக்கழகம் நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல் உள்ளதாக, கலைப்பீட மாணவர் ஒன்றியம் சில தினங்களுக்கு முன்பு குற்றஞ்சாட்டியிருந்தது.

உயர் நீதிமன்றத்தின் பணிப்புரை காரணமாக, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில், பேராசிரியர் ஒருவர் மீது சுமத்தப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் எந்த முடிவுகளையும் எடுக்க முடியாமல் இருப்பதாக, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பதிவாளர் காண்டீபன் தெரிவித்தார்.

அதேவேளை, பேராசிரியர் மீதான பாலியல் குற்றச்சாட்டு ஏற்கனவே இடம்பெற்றதொன்று, இது தொடர்ச்சியாக இடம்பெறுகின்றது என்பதற்கான முறைப்பாடுகளோ அல்லது அதற்கான ஆதாரங்களோ இல்லை என்று, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அனைத்து பீட மாணவர் ஒன்றியத்தின் தலைவர் கிருஷ்ணமேனன் தெரிவித்தார்.

அவ்வாறு பாலியல் துன்புறுத்தல்கள் இடம்பெறுவதாக உறுதிப்படுத்தினால், அதற்கான தீர்வு நடவடிக்கைக்கு மாணவர் ஒன்றியம் பூரண ஒத்துழைப்பை வழங்கும். ஊடகவியாலாளர் சந்திப்பு நடத்தவுள்ளதாகவும் அதில் மாணவிகள் மீதான பாலியல் துன்புறுத்தல் தொடர்பான விடயங்கள் தெரிவிக்கப்படவுள்ளதாவும் அனைத்து பீட மாணவர் ஒன்றியத்தின் தலைவர் என்ற ரீதியில் எனக்கு அறிவிக்கப்படவில்லையென்றும் அவர் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.