ரஹ்னா பாத்திமா யார் இவர்கள்? இவர் ஒரு பெண் உரிமை போராளியா?

0

கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்த இஸ்லாமியரான ரஹ்னா பாத்திமா மத்திய அரசு ஊழியர். இரண்டு குழந்தைகளுக்கு தாயான அவர், மாடலாகவும், சமூக செயற்பாட்டாளராகவும் செயல்பட்டு வருகிறார். கடந்த மார்ச் மாதம் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள பரூக் கல்லூரியில், பேராசிரியர் ஒருவர், மாணவிகளின் மார்பகங்களை தர்பூசணியுடன் ஒப்பிட்டு பேசியதற்கு எதிராக ரஹ்னா பாத்திமா போராடினார். எனது உடல், எனது உரிமை என்பதை உணர்த்தும் விதமாகவும் ஆசிரியருக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாகவும், தர்பூசணியுடன் மேலாடை அணியாத தனது அரைநிர்வாண புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். கடந்த 2014ம் ஆண்டு பொது இடங்களில் முத்தமிட்டுக்கொள்ளும் முத்தப்போராட்டத்தில் பங்கேற்றார். கடந்த 2016ம் ஆண்டு திருச்சூரில் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் புலிகலி நிகழ்ச்சியில், புலி வேடத்தில் பங்கேற்ற முதல் பெண் என்பதை பிரகடனப்படுத்திக் கொண்டார். அவரது கணவர் மனோஜ் இயக்கிய ஓரினச் சேர்க்கையாளர் பற்றிய ஈகா என்ற திரைப்படத்தில் ரஹ்னா பாத்திமா நடித்துள்ளார்.

மேலும், இவர் உச்சநீதிமன்ற உத்தரவு வந்த பின் ஆபாசமாக கருப்பு உடையணிந்து சமூக வலைதளத்தில் கருத்து வௌியிட்டிருந்தார். அதில், சபரிமலைக்கு செல்ல மாலை அணிந்து இருப்பதாகவும், கண்டிப்பாக செல்வேன் எனவும் கூறியிருந்தார். மேலும் ஏராளமான ஆபாச படங்களையும், மது குடிப்பது போன்ற படங்களையும் வெளியிட்டிருந்தார். ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் ஒளிபரப்படும் தனியார் டிவி செய்தி சேனலின் பெண் நிருபர் கவிதா. இந்த டிவி சேனலின் அலுவலகம் ஐதராபாத்தில் பஞ்சாராஹில்ஸ் பகுதியில் அமைந்துள்ளது.

ரஹ்னா வீடு மீது தாக்கு

சபரிமலைக்கு செல்ல முயன்று திருப்பி அனுப்பப்பட்ட நிலையில், கொச்சியில் உள்ள ரஹ்னா பாத்திமா வீட்டில் ஒரு கும்பல் சரமாரியாக தாக்குதல் நடத்தியது. இதில் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் நொறுங்கின. இது குறித்து ெரஹ்னா பாத்திமா கூறியதாவது: நான் சபரிமலை செல்ல வேண்டும் என்ற திட்டத்துடன் தான் வந்தேன். முன்பே போலீசாருக்கு இது குறித்து தகவல் தெரிவித்தேன். எனக்கு பாதுகாப்பு தருவதாக போலீசார் உறுதி அளித்ததால் தான் நான் சபரிமலை புறப்பட்டேன். சன்னிதானத்தில் எதிர்ப்பையும் மீறி 18ம் படி ஏறவேண்டும் என்றுதான் விரும்பினேன். ஆனால் சன்னிதானத்தில் கடும் எதிர்ப்பு வந்தது. திரும்பி செல்லாவிட்டால் பயங்கர விளைவுகள் ஏற்படும் என்று எனக்கு தோன்றியது. போலீசாரும் அதைத்தான் கூறினர். வேறு வழியில்லாமல் திரும்பி விட்டேன்.

இவ்வளவு தூரமாவது வர முடிந்தது என்ற மகிழ்ச்சி உள்ளது. ஐயப்பனை பார்க்கவேண்டும் என்ற விருப்பத்தால் தான் இருமுடி கட்டை தலையில் ஏந்தி வந்தேன். ஆனால் எதிர்ப்பு வந்ததால் இருமுடி கட்டை இங்கேயே விட்டு செல்கிறேன். என் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. என் வீடு மீது தாக்குதல் நடந்துள்ளது. என் குழந்தைகள் எங்கு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. நான் பக்தர்தானா என என்னிடம் கேட்கிறீர்கள். நானும் பக்தர்தான். பக்தர் என்பதற்கு என்ன விதிமுறைகள் உள்ளது என பட்டியலிடுங்கள். நானும் பட்டியலிடுகிறேன். இவ்வாறு அவர் ஆவேசமாக கூறினார்.

இதுவே பெருமைதான்

பெண் நிருபர் கவிதா கூறுகையில், ‘‘நான் என்னுடைய உரிமைக்காக போராடுவதற்காக தான் சபரிமலை வந்தேன் என்றால் எதிர்ப்பையும் மீறி முன்னோக்கி சென்றிருக்க முடியும். ஆனால் குழந்தைகளை முன்னால் நிறுத்தி பலரும் போராட்டம் நடத்தினர். என்னால் குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படுவதை நான் விரும்பவில்லை. அதனால் தான் சன்னிதானத்தில் இருந்து திரும்பினேன். இவ்வளவு தூரம் வந்ததே பெருமையாக உணர்கிறேன். நான் முன்னேறி செல்ல விரும்பினால், அதற்கான பாதுகாப்பு தர தயாராக இருப்பதாக போலீசார் தரப்பில் கூறினர்’’ என்றார்.

Leave A Reply

Your email address will not be published.