புலம்பெயர் தமிழ் தலைமைகள் இந்நாட்டில் சிங்கள – முஸ்லிம் கலவரங்களை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும், அதற்காக சிங்கள குழுக்களை வைத்து செயற்படுவதாகவும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச தெரிவித்தார்.
முஸ்லிம்கள் வடக்கு, கிழக்கு இணைப்பதனை விரும்புவதில்லை. சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் மோதலை ஏற்படுத்தினால், முஸ்லிம்கள் இலகுவாகவே தமிழ் மக்களுடன் இணைந்து கொள்ள நிர்ப்பந்திக்கப்படுகின்றார்கள். முஸ்லிம் அரசியல் தலைவர்களில் ஒருவரை திட்டமிட்டு கொலை செய்தால், சிங்களவர்கள் மீது வெறுப்புக் கொண்டு தமிழர்களுடன் முஸ்லிம்கள் இணைய வழி ஏற்படுகின்றது.
இதனால், வடக்கு கிழக்கு இணைப்பை இலகுவாக முன்னெடுக்கலாம் என புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் கனவு காண்கின்றன. இதற்காக வேண்டி பணத்தை அவ்வமைப்புக்கள் அதிகம் செலவு செய்து வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.