வடிவேல் சுரேஷ் 24 மணித்தியாலத்தில் 3 கட்சித் தாவல்! காலை ரணில்- மாலை மகிந்த

0

நேற்று பிரதமர் மகிந்தவை சந்தித்த வடிவேல் சுரேஷ் பொன்னாடை போர்த்திவிட்டு, அவருக்கு ஆதரவை வெளிப்படுத்தினார்…

இதனை உறுப்படுத்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டதன் பின்னர், அந்த செய்தியை மறுத்து அறிக்கை வெளியிட்டார்.

இன்று காலையில் அவர் முன்னைய நாளிலும் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து அவருக்கு ஆதரவளிப்பதாக கூறினார்.

அத்தோடு நிற்கவில்லை… அலரிமாளிகையில் ஊடக சந்திப்பை நடத்தி, தாம் பிரதமர் மகிந்தவோடு இணைந்துக் கொள்வதாக செய்தி வெளியிட்ட ஊடகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவிருப்பதாகவும் அறிவித்தார்.

ஆனால் பாருங்கள்… மாலை வேளையில் ராஜாங்க அமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டிவிட்டார்….

….மொத்த மலையக அரசியலுக்குமான அவமானம்…

Leave A Reply

Your email address will not be published.