வவுனியா ஏ 9 வீதியில் கோர விபத்து ! ஒருவர் ஸ்தலத்தில் பலி ! இருவர் படுகாயம் ! படங்கள் இணைப்பு

0

வவுனியா புளியங்குளம் பகுதியில் இன்று காலை 5 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியதுடன், இருவர் படுகாயமடைந்துள்ளனர்.சம்பவம் தொடர்பாக தெரியவருகையில் கொழும்பில் இருந்து யாழ்பாணம் நோக்கிச் சென்ற குளிர்சாதன வாகனமும் கெக்கிராவையில் இருந்து மல்லாவி நோக்கி அறுவடை இயந்திரத்தை ஏற்றிசென்ற உழவியந்திரமும் மோதியதிலேயே விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ் விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில்…
உழவு இயந்திரம் எ9 வீதியில் புளியங்குளத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகாமையில் தரித்து நின்ற சயமத்தில் கொழும்பில் இருந்து வந்த குளிர்சாதன வாகனம் மோதியதியேலே குறித்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகின்றது.\

விபத்தில் குளிாசாதன வாகனத்தில் பயணம் செய்த யாழ்பாணம் வடமாராட்சியை சேர்ந்த மரியதாஸ் நிறோசன் என்பவரே பலியாகியுள்ளார். மேலும், அதே வாகனத்தில் பயணித்த அயந்தனின் கைஒன்று துண்டிக்கபட்டுள்ளது.

உழவு இயந்திரத்தில் இருந்த சிந்துயன் என்ற இளைஞர் படுகாயமடைந்ததுடன் மற்றுமொருவர் சிறு காயங்களிற்கு உள்ளாகியுள்ளார்.விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை புளியங்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.