வாளுடன் மைதானத்திற்குள் நுழைந்து அச்சுறுத்திய நபர் சிறையில்!

0

இளைஞர்களை அச்சுறுத்திய நபருக்கு விளக்கமறியல்

விளையாட்டின் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தை அடுத்து வாளுடன் மைதானத்திற்குள் புகுந்து இளைஞர்களை அச்சுறுத்திய நபரை எதிர்வரும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.அளவெட்டி பகுதியில் உள்ள மைதானம் ஒன்றில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை விளையாட்டில் ஈடுபட்டு இளைஞர்கள் விளையாட்டில் ஈடுபட்டு இருந்த வேளை விளையாட்டு தொடர்பில் இளைஞர் ஒருவருடன் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு உள்ளது.

அதனை அடுத்து அங்கிருந்து சென்ற இளைஞன் பின்னர் வாளுடன் மைதானத்திற்குள் நுழைந்து தன்னுடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்ட இளைஞர்களை அச்சுறுத்தும் விதமாக நடந்து கொண்டதை அடுத்து அங்கிருந்த இளைஞர்கள் குறித்த இளைஞனை மடக்கி பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

அதனை அடுத்து குறித்த இளைஞனை கைது செய்த தெல்லிப்பளை காவல்துறையினர் நேற்றைய தினம் மாலை மல்லாகம் நீதிவான் நீதிமன்றின் நீதிவானின் உத்தியோகபூர்வ இல்லத்தில் முற்படுத்தினார்கள். அதனை அடுத்து நீதிவான் குறித்த இளைஞனை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் தடுத்து வைக்க உத்தரவிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.