விசேட செய்தி: அலரிமாளிகையை விட்டு வெளியேறியது ரணிலின் பாதுகாப்பு படை! அடுத்தது என்ன?

0

தேசிய அரசாங்கத்தின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கப்பட்டிருந்த 800 பேரைக்கொண்ட பாதுகாப்புப் படையணியை மீளப் பெறுவதற்கு பொலிஸ் மா அதிபர் வழங்கிய உத்தரவின் பிரகாரம் பத்துப்பேரைத் தவிர அனைத்து படையணியினரும் வெளியேறிவிட்டதாக தகவல் கிடைத்துள்ளது.

இதன்படி அலரிமாளிகையில் தங்கியுள்ள ரணில் விக்கிரமசிங்கவுக்கு மொத்தம் பத்துப் பாதுகாப்புப் படையணியினரே பாதுகாப்பு வழங்கிவருவதாக கூறப்பட்டுள்ளது.

சிறிலங்கா அரச தலைவரின் உத்தரவிற்கு அமைய நல்லாட்சி அரசாங்கத்தின்பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்புக்காக வழங்கப்பட்டிருந்த 800 பேரைக் கொண்டபடை அணியை மீளப்பெற்றுக்கொண்டுள்ள பொலிஸ் மா அதிபர், வெறும் பத்து பேரை மாத்திரம்அவரது பாதுகாப்பிற்கு அமர்த்துமாறு உத்தரவிட்டிருந்தார்.

சிறிலங்கா பிரதமரின் பாதுகாப்புக்குப் பொறுப்பாக இருந்த பிரதி பொலிஸ்மா அதிபர் ஜயந்த விக்கிரமசிங்கவிற்கு பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர கடிதம்மூலம் இந்த உத்தரவைப் பிறப்பித்திருந்தார்.

மிகவும் அத்தியவசியமான கடமையாக கருதி இந்த உத்தரவை நிறைவேற்றி அதனை தனக்கு அறியத்தருமாறும் பொலிஸ் மா அதிபர் பிரதி பொலிஸ் மா அதிபரிடம் கேட்டுக்கொண்டார்.

எவ்வாறாயினும் இன்னமும் நாட்டின் சட்டபூர்வமான பிரதமராக ரணில்விக்கிரமசிங்கவே இருப்பதாகத் தெரிவித்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான நல்லாட்சி அரசாங்கத்தின் சட்டம் ஒழுங்கு பிரதி அமைச்சர் நளீன்பண்டார, பிரதமர் ரணிலின் பாதுகாப்பிற்கு ஏதாவது ஆபத்து நேர்ந்தால் அதற்கான முழுப்பொறுப்பையும் அரச தலைவர் மைத்ரிபால சிறிசேனவும், மஹிந்த ராஜபக்சவும் அவர்களது தரப்பினரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.

பாராளுமன்றத்தை கூட்டும்வரை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பை அகற்றக்கூடாது என்றும் நளீன் பண்டார கோரிக்கை விடுத்திருக்கின்றார்.

அதேவேளை பிரதமர் ரணில் தலைமையிலான அரசாங்கம் ஆட்சீபீடம் ஏறிய போதிலும், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபயவிற்கு 70 பேர் கொண்ட இராணுவம்,விசேட அதிரடிப்படையினரைக் கொண்ட பாதுகாப்பு படையணியை தொடர்ந்தும் வழங்கியிருந்ததாகவும் நளீன் பண்டார சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Leave A Reply

Your email address will not be published.