விடுதலைப்புலிகளின் இலச்சினையுடன் வெளியான துண்டுப்பிரசுரம்! தமிழ் மக்கள் பேரவை மறுப்பு!

0

தமிழ் மக்கள் பேரவையின் பெயரில் விடுதலைப்புலிகளின் இலச்சினையுடன் அநாமதேய துண்டுப்பிரசுரமொன்று வெளியிடப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

இத்துண்டுப் பிரசுரத்திற்கும் தமிழ் மக்கள் பேரவைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம் என்று தமிழ் மக்கள் பேரவை சற்று முன்னர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்ட இத்துண்டுப் பிரசுரமானது மக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி, எதிர்வரும் 24 ஆம் திகதி புதன்கிழமை தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் நடைபெறவிருக்கின்ற மாபெரும் மக்கள் கூட்டத்தைக் குழப்புகின்ற நோக்கத்தைக் கொண்டதாகும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இத்தகைய செயலில் யார் ஈடுபட்டாலும் இவை அநாகரிகமானவை. இத்தகைய செயற்பாட்டின் உள்நோக்கத்தை எங்கள் தமிழ் மக்கள் நன்கு புரிந்து கொள்வர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யார் எந்தக் குழப்பத்தைச் செய்ய முற்பட்டாலும் தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் எதிர்வரும் 24 ஆம் திகதி மாபெரும் மக்கள் எழுச்சிக் கூட்டம் நடைபெறும்.

இதேவேளை, இக்கூட்டத்தில் அனைத்து தமிழ் மக்களையும் பங்கேற்குமாறு தமிழ் மக்கள் பேரவை அன்புரிமையுடன் வேண்டி நிற்கின்றது என்று அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.