விரதம் இருந்த காதல் மனைவி ! 8வது மாடியிலிருந்து தள்ளி கொலை செய்த கணவன் ! காரணம் என்ன ?

0

காதலித்து திருமணம் முடித்த தம்பதிகள் பெரும்பாலும் ஒருவருக்கொருவர் விசுவாசமாகவும் நட்புணர்வுடனும் இருப்பது வழமை.husband kills wife pushing upstairs Tamil News Latest

இதற்கு மாறாக கணவன் தனது காதல் மனைவியை மாடியில் இருந்து தள்ளி விட்டு கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது .

இந்தியாவின் அரியானா மாநிலம் குர்கான் பகுதியை சேர்ந்தவர் தீபிகா .இவருக்கு வயது 32 . தனியார் வங்கி ஒன்றில் வேலை செய்து வரும் தீபிகா கடந்த 2013ம் ஆண்டு விக்ரம் சௌஹானை காதலித்து மணந்துகொண்டார் .

இந்த காதல் தம்பதிகளுக்கு காதல் பரிசாக 4 வயதில் ஒரு மகனும், 6 மாத கைகுழந்தையும் உள்ளனர்.

தீபிகா தன்னுடைய கணவனுக்காக வட இந்தியாவில் திருவிழாவாக கொண்டாடப்படும் “கர்வா சௌத்” என்னும் விரதத்தை அனுஷ்டித்துள்ளார் .

விரதம் இருந்த அதே நாள் தீபிகா தனது கணவனுக்கு திருமணமான பிறிதொரு பெண்ணுடன் இருக்கும் கள்ள தொடர்பு பற்றி குடைந்துள்ளார் ( சிக்கினான் சிவனாண்டி )

மனைவியின் அகோர கேள்விகளால் நிலைகுலைந்து போன கணவன் ஆத்திரம் அடைந்து மனைவியை தாக்கியுள்ளார் .பதிலுக்கு மனனவியும் விடாமல் தாக்க அது கைக்கலப்பாக மாறியது .

கைகலப்பு முற்றிய நிலையில் விக்ரம் 8 வது மாடியின் பால்கனியில் இருந்து தனது காதல் மனைவி தீபிகாவை தள்ளிவிட்டுள்ளார்.

8 மாடியில் இருந்து தள்ளி விட்டால் சொல்லவா வேணும் ?தீபிகா இரத்த வெள்ளத்தில் மூழ்கி கிடந்தார் .இதனை பார்த்த அயலவர்கள் பதைபதைத்து போய் தீபிகாவை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தார்கள் .

அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட தீபிகா சில நிமிடங்களில் சிகிச்சை பலன் இன்றி பரிதமாக உயிரிழந்தார் .

இந்த கொலை தொடர்பில் தீபிகாவின் தந்தை போலீசாருக்கு தகவல் கொடுக்கவே பொலிஸார் கணவனை கைது செய்துள்ளார்கள் .

கள்ள தொடர்புக்காக தனது காதல் மனைவியை ஈவிரக்கம் இன்றி மாடியில் இருந்து தள்ளி கொலை செய்தமை அந்த பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

Leave A Reply

Your email address will not be published.