வெளிநாடொன்றில் மக்களை அசரவைத்த யாழ் இளைஞன்; என்ன செய்கிறார் தெரியுமா?

0

கனடாவின் டொரொண்டோ நகரில் உள்ள உணவகம் ஒன்றில் பணிபுரியும் இலங்கையை பூர்வீகமாக கொண்ட சமையல் கலை நிபுணர், அந்த உணவகத்திற்கு முதுகெலும்பாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரிஸ் மரபு சார்ந்த இந்த உணவகத்தில் பொன்னையா விஜயரட்னம் என்பவர் பிரபலமாக சமையல் கலை நிபுணராக இருந்து வருகிறார்.

இந்த உணவகத்தில் பரிமாறப்படும் உணவுகள் வீட்டில் சமைத்த உணவுகள் போல் இருக்கும் என சீ.பீ.சி ஊடகம் தெரிவித்துள்ளது.

இந்த உணவகத்தில் சமைக்கப்படும் இலங்கை இறால் கறி மிகவும் பிரபலமானது. இதனை தவிர நண்டு கறியும் பிரபலமானது.

இலங்கையில் தனது தாய் எப்படியான மசாலாக்களை பயன்படுத்தினாரோ தானும் அதனையே பயன்படுத்தி வருவதாகவும் விஜயரடன்ம் தெரிவித்துள்ளார்.

விஜயரட்னம் சமையலுக்கான மசாலாப் பொருட்களை தானே தயாரித்து உணவை சமைத்து வருவதாக உணவகத்தின் உரிமையாளர் மெக்ஸ்வெல் கூறியுள்ளார்.

இலங்கையின் யாழ்ப்பாணத்தில் பிறந்த விஜயரட்னம், நாட்டில் நடந்த உள்நாட்டு போர் காரணமாக தனது 17 வயதில் நாட்டில் இருந்து வெளியேறியுள்ளார்.

ஆறு ஆண்டுகள் கிறீஸில் சமையல்காராக தொழில் புரிந்துள்ளார். இதன் பின்னர் கனடா சென்றுள்ளார். அங்கு சென்று உணவகத்தின் உரிமையாளரை சந்தித்து வேலையில் இணைந்துக்கொண்டுள்ளார்.

அவர் தற்போது உணவகத்தின் தலைமை சமையல் கலை நிபுணராக இருந்து வருகிறார். இந்த உணவகம் முழுவதும் தமிழ் சமையல்காரர்களே தொழில் புரிகின்றனர்.

டொரொண்டோவில் உள்ள உணவகத்தில் இலங்கை தமிழர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த உணவகத்தின் கிளை நியூயோர்க்கிலும் உள்ளதுடன் அதில் கொலம்பியர்கள் மற்றும் மெக்சிகோ நாட்டினர் தொழில் புரிந்து வருகின்றனர்.

விஜயரட்னம் 1980ஆம் ஆண்டுக்கு முன்னர் கனடா சென்றுள்ளார். தற்போது 2 லட்சத்திற்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள் கனடாவில் வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.