வெளிநாட்டில் உயிரிழந்த தமிழ் இளைஞன் ! உடலை பெற்று தருமாறு கோரி மனைவி கதறல் ! துயரச் சம்பவம்

0

சவுதி அரேபியாவிற்கு வேலைக்குச் சென்று உயிரிழந்த இளம் குடும்பஸ்தரின் சடலத்தினை 43 நாட்களாக இலங்கைக்கு கொண்டுவர முடியாமல் இருப்பதாக உயிரிழந்தவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.சடலத்தினை இலங்கைக்கு கொண்டு வர உதவி செய்யுமாறு குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இலுப்படைச் சேனையை சேர்ந்த 28 வயதுடைய இளம் குடும்பஸ்தரான தவராஜா கோமலன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சவுதியில் மாரடைப்பு காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதம் 21ஆம் திகதி இவர் உயிரிழந்துள்ளார்.அவரின் சடலம் சவுதியில் உள்ள வைத்திய சாலையொன்றில் வைக்கப்பட்டுள்ளது.

எனினும் இதுவரையில் சடலத்தினை இலங்கைக்கு கொண்டுவருவதற்கான எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என உறவினர்கள் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்.இந்த சம்பவம் தொடர்பில் உயிரிழந்தவரின் மனைவி கூறியதாவது;

கணவர் உயிரிழந்து 43 நாட்களை கடந்துள்ள நிலையிலும் இதுவரையில் அவரது சடலத்தினை கொண்டுவந்து தங்களிடம் ஒப்படைக்க யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இது தொடர்பில் வவுணதீவு பிரதேச செயலகம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியம் உட்பட பல்வேறு இடங்களிலும் தெரிவித்துள்ளோம்.இதுவரையில் யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கவலை வெளியிட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.