ஹன்சிகாவின் வீட்டிற்கு விசிட் அடித்த வடமாகாணசபை உறுப்பினர் ! படங்கள் உள்ளே

0

வவுனியாவுக்கு பெருமை சேர்த்த மாணவி பா.ஹர்த்திக் ஹன்சிகாவை பாராட்டிய மா.ச.உறுப்பினர் சத்தியலிங்கம் நடைபெற்று முடிந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 197 புள்ளிகளைப் பெற்று தேசிய ரீதியில் மூன்றாமிடத்தையும், மாவட்டத்தின் முதன் நிலையை பெற்ற சிவபுரம் அ.த.க பாடசாலை மாணவியான செல்வி பா.ஹர்த்திக் ஹன்சிகாவை வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரும் மாகாண சபை உறுப்பினருமாகிய மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவரது வீட்டிற்கு சென்று பாராட்டுதல்களை தெரிவித்தார்.

நேற்று (09.08) சிவபுரத்திலுள்ள மாணவியின் இல்லத்திற்கு நேரடியாகச் சென்ற மாகாண சபை உறுப்பினர் மாணவியை பாராட்டி கௌரவித்ததுடன் தொடர்ந்தும் கல்வியில் ஊக்கத்துடன் ஈடுபட்டு சமூகத்தில் உச்ச நிலைக்கு வளரவேண்டுமென கேட்டுக்கொண்டார்.

Leave A Reply

Your email address will not be published.