14வயது சிறுமி தந்தை, மாமா உடப்பட ஐவரால் துஷ்பிரயோகம் ! கண்டியில் நடந்த கொடூரம்

0

இலங்கையின் கண்டியில் சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஐந்து பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பாதஹேவாஹட்ட -உடுவல பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயதான சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த தந்தை, மாமா உட்பட ஐந்து போரை தலாதுஒய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர்கள் கண்டி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.வீட்டிலிருந்த தனது மகளை காணவில்லையென கடந்த 4ம் திகதி தலாதுஒய பொலிஸ் நிலையத்தில் தந்தை முறைப்பாடு செய்துள்ளார்.

சம்பவம் குறித்து விசாரணை நடத்திய தாலதுஒய பொலிஸின் குற்றப் புலனாய்வு பிரிவினர், சிறுமி லுணுகல பொலிஸ் காவலில் இருப்பதை அறிந்து கொண்டுள்ளனர்.தலாதுஒய பொலிஸ் அதிகாரிகள் அங்கு சென்று சிறுமியை அழைத்துக்கொண்டு தலாதுஒய பொலிஸ் நிலையத்திற்கு வந்துள்ளனர்.பின்னர், தலத்துோய பொலிஸ் குற்றவியல் புலனாய்வு பிரிவின் உத்தரவின் பேரில் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவின் உத்தியோகத்தர்களுடன் குற்றவியல் புலனாய்வு அதிகாரிகள் கூட்டாக, சிறுமி வீட்டை விட்டு வெளியேறியமை தொடர்பாக விசாரணை நடாத்தியுள்ளனர்.

இதன்போது தனக்கு நேர்ந்த கொடுமைகளை சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.சிறுமியின் தாய் வெளிநாட்டில் வேலை செய்கிறார். தான் தந்தை மற்றும் தங்கையுடன் பாட்டியின் வீட்டில் வசிப்பதாக தெரிவித்துள்ளார். 10ம் வகுப்பில் கல்வி பயில்கிறார்.

தந்தை மற்றும் மாமா என அழைக்கப்படும் மற்றுமொரு நபரும் இன்னும் மூன்று பேரும் பாலியல் பலாத்காரம் செய்ததாக சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.இந்த கொடுமையை தாங்கிக் கொள்ள முடியாத சிறுமி லுணுகலையில் உள்ள அவர் பாட்டி வீட்டிற்கு சென்றதாகவும், லுணுகல பொலிஸ் அதிகாரிகள் தன்னை கைது செய்ததாகவும் கூறியுள்ளார்.

இதனையடுத்து சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக கண்டி பொது வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன் தலாதுஒய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்

Leave A Reply

Your email address will not be published.