16 வயது குறைந்த வாலிபரை காதலிக்கும் பிரபல நடிகை !

0
பிரபல பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென் தனது நடிப்பு மற்றும் திறமையால் பல லட்சம் இதயங்களை வென்றவர்.  

இவர் ஹோட்டல் உரிமையாளரான ரித்திக் போஸனை காதலித்து வந்தார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆண்டு பிரிந்துவிட்டார். தற்போது 42 வயதாகும் சுஷ்மிதா சென், இன்னும் திருமணம் செய்து கொள்ளவிலலை.

இரண்டு பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். அந்த குழந்தைகளுக்கு ரெனீ சென், அலிசா சென் என்று பெயர் வைத்துள்ளார். சுஷ்மிதா சென்னுக்கும் உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவை சேர்ந்த ரொமன் ஷால் என்பவருக்கும் காதல் மலர்ந்துள்ளதாக  கூறப்படுகிறது.
ரொமன் ஷாலுக்கு 27 வயது ஆகிறது. தன்னை விட 16 வயது குறைந்தவரை சுஷ்மிதா சென் காதலிக்கிறார். இருவரும் தாஜ்மஹாலுக்கு ஜோடியாக சென்றுள்ளனர். அங்கு சேர்ந்து எடுத்துக்கொண்ட படத்தை சுஷ்மிதா சென் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து காதலை உறுதிப்படுத்தி உள்ளார். படத்தின் கீழே எனது வாழ்க்கையின் காதல் என்று கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.