189 பேருடன் வீழ்ந்து நொறுங்கிய விமானம்.! கடைசியாக விமானி பேசியது என்ன? திக் திக் நிமிடங்கள்

0

189 பேருடன் சென்ற பயணிகள் விமானத்தின் விமானி, விமானத்தில் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாகவும், அதன் காரணமாக அதை பாதுகாப்பாக தரையிரக்க முயற்சி செய்வதாக விமானகட்டுப்பாட்டு அறையுடன் கடைசியாக பேசியுள்ளார்.

இந்தோனேஷியாவில் பயணிகள் விமானம் ஒன்று கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணம் செய்த 189 பேரும் உயிரிழந்திருக்க கூடும் என்று அதிகாரிகள் கூறி வருகின்றனர்.

பயணிகளின் உடல்களை மீட்பு படையினர் மீட்டு வருகின்றனர். அவர்களுக்கு உள்ளூர் மீன்வர்களும் உதவி செய்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தேடல் மற்றும் மீட்பு நிறுவனத்தின் டைரக்டர் Bambang Suryo விமானத்தில் இருந்த அனைவரும் உயிர் பிழைப்பதற்கு வாய்ப்பே இல்லை. தற்போது வரை 26 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

மேலும் அதன் தலைமை அதிகாரி Marshal Muhammad Syaugi, விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டியினை 30 பேர் கொண்ட குழுவினர் தேடி வருகின்றனர். அதுமட்டுமின்றி இந்த விபத்திற்கான காரணம் என்ன என்பது குறித்த ஆதாரங்களையும் தேடி வருகின்றனர்.

விமானம் கடலில் விழுந்த எந்த ஒரு குண்டு சத்தமும் கேட்கவில்லை என்று உள்ளூர் மக்கள் கூறுகின்றனர். அதனால் விமான விபத்திற்கு அது காரணமாக இருக்காது.

விமானத்தை இயக்கிய இந்திய விமானி Bhavye Suneja பயணிகளை காப்பாற்ற முயன்றுள்ளார். அவர் கடைசியாக விமான கட்டுப்பாட்டு அறைக்கு பேசுகையில், விமானத்தில் ஏதோ தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது, இதனால் விமானத்தை பாதுகாப்பாக விமாநிலையத்தில் தரையிறக்க முயற்சிக்கிறேன் என்று கூறினார்.

அதற்கு கட்டுப்பாட்டு அறையில் இருந்து அனுமதியும் கொடுக்கப்பட்டது. ஆனால் அனுமதி கொடுக்கப்பட்ட சில நிமிடங்களில் விமானத்தின் சிக்னல் எதுவும் கிடைக்கவில்லை.

அது தான் அவர் பேசிய கடைசி பேச்சாகும். இந்தவிபத்தில் அவரும் இறந்துவிட்டார் என்று விமான கட்டுப்பாட்டு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

 

Leave A Reply

Your email address will not be published.