2,300 அடி உயரத்தில் கண்ணைக் கட்டிக்கொண்டு கயிற்றில் நடந்த இளைஞர் ! மயிர்கூச்செரியும் சம்பவம்

0

பிரான்ஸ் நாட்டில் இரண்டு சிகரங்களுக்கு நடுவே 2,300 அடி உயரத்தில் கட்டப்பட்ட கயிற்றில் கண்ணைக் கட்டிக்கொண்டு நடத்து சாதனை படைத்துள்ளார் பிரான்ஸ் இளைஞர்.

பிரான்ஸ் நாட்டின் ஆல்ப்ஸ் மலையில் அன்டாய்னே கிரேஷினன் (Antoine Cretinon) என்ற இளைஞர் இந்தச் சாதனையை படைத்துள்ளார். அன்னெசி ஏரியின் கரையில் அமைந்துள்ள மலைகளுக்கு இடையே கயிற்றைக் கட்டி இந்த சாகசத்தை நிகழ்த்தியுள்ளார்.

பதைபதைக்க வைக்கும் இந்த சாகசத்தின்போது கண்களையும் கட்டிக்கொண்டார். இவரது சாகச நிகழ்ச்சி அந்நாட்டுத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு ஏராளமான பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளது.

அசால்ட்டாக சாகசம் புரிந்த அன்டாய்னே, “கண்களைக் கட்டிக்கொண்டுவிட்டதால் உடலின் மற்ற பாகங்கள் மீது வழக்கத்தைவிட பத்து மடங்கு கவனம் கொள்ள வேண்டும்” என்றார்.

Leave A Reply

Your email address will not be published.