வாழ்க்கையில் சாதனை புரிந்தவர்கள் அனைவரும் சுகபோக வாழ்க்கை , ஆடம்பர வாழ்க்கை வாழ்கின்றார்கள் என்று கூறிவிட முடியாது .இதற்கு எடுத்துக்காட்டாக மனதை உருக்கும் ஒரு சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது .
குத்துச்சண்டைப் போட்டியில் 17 தங்கப்பதக்கம் பெற்று சாதனை புரிந்த இளைஞன் இன்று வீதியில் ஐஸ் விற்பனை செய்து பிழைப்பு நடத்துகின்றார் என்றால் நம்புவீர்களா ?நம்பி தான் ஆகணும் ,.
இந்தியாவின் ஹரியானா மாநிலம் பிவானி பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ் குமார். குத்துச்சண்டை வீரரான இவர் பல போட்டிகளில் விளையாடி இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர் .
கடந்த 2010 ஆம் ஆண்டு இந்திய அரசின் சிறந்த வீரருக்கான அா்ஜூனா விருதை தட்டிச் சென்ற தினேஷ் குமார் இதுவரை 17 தங்கப்பதக்கம், 1 வெள்ளி, 5 வெண்கலம் வென்றுள்ளார் .
சாதனை நாயகனாக வலம் வந்த தினேஷின் வாழ்க்கையில் திடீர் என்று புயல் வீச ஆரம்பித்தது .சாலையில் ஏற்பட்ட விபத்தில் சிக்கிய தினேஷ் அதன் பிறகு விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ள முடியாமால் உள்ளார் .
குத்துச்சண்டை வீரராக ஜொலித்த காலத்தில் வெளிநாட்டில் இடம்பெற்ற போட்டிகளில் கலந்து கொள்வதற்காக இவரது தந்தை கடன் வாங்கியுள்ளார் .அந்த கடனை அடைப்பதற்கும் தனது மருத்துவ செலவினை சமாளிப்பதற்கும் தினேஷ் ஐஸ் விற்பனை செய்து வருகின்றார் .
வாழ்க்கையை கொண்டு நடத்த கூடிய வகையில் நிலையான வேலை வாய்ப்பினை அரசு ஏற்படுத்தி தர வேண்டும் என தினேஷ் கோரிக்கை விடுத்துள்ளார் .
மேலும் இளம் வீரா்களுக்கு பயிற்சி அளித்து அவா்களை சிறந்த வீரர்களாக மாற்ற தன்னால் முடியும் என்று நம்பிக்கையுடன் தினேஷ் தெரிவிக்கின்றார் .
17 தங்கப்பதக்கம் வென்ற ஒரு வீரனுக்கு இந்த நிலையா ?விதி என்று சொல்வது இது தானா? நாட்டுக்கு பெருமை சேர்த்த தினேசுக்கு இந்திய அரசு நிலையான தொழில் வழங்க வேண்டும்.