அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் காரின் முன்னால் அரை நிர்வாணமாக பாய்ந்த பெண்கள் ! புகைப்படங்கள் உள்ளே…!

0

பிரான்ஸ் நாட்டு தலைநகரான பாரிசில் உள்ள ‘ஆர்க் டி டிரியோம்பே’ போர் நினைவு சின்னத்தில் சுமார் உலகில் உள்ள சுமார் 70 நாடுகளை சேர்ந்த முக்கிய தலைவர்கள் இன்று அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் போர் நினைவு சின்னத்துக்கு பலத்த பாதுகாப்புடன் காரில் வந்து கொண்டிருந்தார். அவரது காருக்கு முன்னும் பின்னுமாக பாதுகாப்பு வீரர்கள் கார்களில் வந்தனர்.

அப்போது, சாலையோர தடுப்பை தாண்டி குதித்த இரு பெண்கள் டிரம்ப் கார் அணிவகுப்பின் குறுக்கே மேலாடை இல்லாமல் பாய்ந்தனர். அதற்குள் கண்ணிமைக்கும் நேரத்துக்குள் அந்தப் பெண்களை டிரம்ப்பின் கார் கடந்து சென்று விட்டது. அவரது காருக்கு பின்னால் வந்த கார்களின் அருகே நின்று அவர்கள் டிரம்ப்பை எதிர்த்து கோஷமிட்டனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பாரிஸ் நகர போலீசார் பாய்ந்தோடி சென்று அந்தப் பெண்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி கைது செய்தனர்.

கைதான பெண்கள் டிரம்ப்பின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து இணையதளம் மூலம் நடைபெற்ற ‘ஃபெமென்’ இயக்கத்தின் ஆதரவாளர் என தெரியவந்துள்ளது.

முன்னதாக, நேற்று முன்தினம் காலை இதே இயக்கத்தை சேர்ந்த 3 பெண்கள் ‘ஆர்க் டி டிரியோம்பே’ போர் நினைவு சின்னத்தின் அருகே மேலாடை இல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

Leave A Reply

Your email address will not be published.