அமைச்சர் இல்லாமலே முல்லை அரச அதிபரை மிரட்டிய றிஷார்ட்!

முல்லைத்தீவை முஸ்லீம்தீவாக மாற்றிக்காட்டுவோம் என கூறிய முகமட் சிபானின் ஊழலுக்காக

0

தற்போது அமைச்சுப் பதவியை இழந்திருப்பவர் றிஷார்ட். இவர் அமைச்சர் இல்லாமலே முல்லைத்தீவு அரசாங்க அதிபரை மிரட்டியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. தனது நெருங்கிய ஆதரவாளன் ஒருவரின் ஊழல் மோசடி தொடர்பில் தட்டிக் கேட்ட அரச அதிபருக்கு கடும் அழுத்தம் விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த மாத ஆரம்பத்தில் கரைதுறைப்பற்று பிரதேச செயலத்தின் சமுர்த்தி ஊழல் தொடர்பாக எமது செய்திப்பிரிவின் மூலம் இனங்காட்டி இருந்தோம். அதனைத் தொடர்து சமுர்த்தி உத்தியோகத்தரான ஜோசப் ஜோயீஸ்குமார் என்பவர் ரூபா இரண்டு இலட்சம் ரூபாவினை உடனாடியாக பிரதேச செயலக சமுர்த்தி வங்கியில் செலுத்தியுள்ளார். இது எமது செய்தி வெளியாகிய பின்னர் மாவட்ட செயலரால் இவரை கடமை இடைநிறுத்தம் சொய்யபடுவதற்கான கடிதம் கையொப்பத்துக்காக உதவி அரசாங்க அதிபர் மேசையில் காத்திருப்பதை அறிந்து உடனடியாக பணம் மீள சொலுத்தி இடைநிறுத்த கடிதம் தடை செய்யப்பட்டது.

இது இவ்வாறு இருக்க, முல்லைத்தீவை முஸ்லீம் தீவாக மாற்றிக்காட்டுவோம் என கூறிய முகமட் சிபான் என்பவர் எமது செய்தி வெளிப்படுத்தப்பட்டதை அறிந்து உடனடியாக ஒருலட்சத்து முப்பத்து எட்டாயிரம் ரூபாவை மீள செலுத்தி அது ஊழியர் மோசடி கணக்கில் வைப்பிடப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து இவருடைய மாமணாரான வடமாகானசபை உறுப்பினர் ஜாவாகீர் அவர்கள் அரசாங்க அதிபரிடம் ஏன் ஜோசப் ஜோயீஸ்குமார் சார்ந்த விடயம் ஒரு வருடமாக மறைக்க முடிந்தது. ஏன் முகமட் சிபானுடைய விடயத்தில் மட்டும் பெரிதுடுத்துகிறீர்கள் எனவும் இதை பெரிதுபடுத்த வோண்டாம் என கூறிய போது அரசாங்க அதிபர் ஜோசப் ஜோயீஸ்குமாரது குற்றச்சாட்டுக்களுக்கு அவர் தொடர்பான சரியான ஆதாரம் இன்னும் நிருபிக்கப்படவில்லை தற்போதுதான் சில ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

ஆதனால் அதை கணக்காய்வு பிரிவுக்கு அனுப்பியுள்ளோம் ஆனால் முகமட் சிபானுடைய விடயம் ஆதாரபூர்வமாக நிருபனமனதால் அவருடன் இதை ஒப்பிட வோண்டாம் என கூறியுள்ளார் இதனால் அரச அதிபருடன் வாக்குவாதப்பட்டு இதன் பின்னர் எந்த முடிவும் எடுக்க முடியாதவராக அரச அதிபர் நிர்ப்பந்திக்கப்பட்டார் இதை தொடர்ந்து ஜோசப் ஜோயீஸ்குமார் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்துக்கு தண்டனை இடமாற்றம் வழங்கப்பட்டது முகமட் சிபானுக்கு மாவட்ட செயலகத்துக்கு இடமாற்றம் சொய்வதாக கூறப்பட்டது.

ஆனாலும் தண்டனை இடமாற்றத்தை முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீனுடைய தலையீட்டால் முகமட் சிபானுடைய இடமாற்றம் இடைநிறுத்தப்பட்டது குறித்த அமைச்சரின் இனைப்பாளராக இருந்தும் ஜோசப் ஜோயீஸ்குமார் கைவிப்பட்டார் மேற்படி சம்பவங்கள் இடம்பெற்றதும் பணம் மீழ சொலுத்தியதும் எமது செய்திப்பிரிவால் இனம்கானப்பட்டு வெளிப்படுத்தப்பட்டதால் மேற்கெள்ளப்பட்டவையாகும்.

முல்லைத்தீவை முஸ்லீம் தீவாக மாற்றுவோம் எனக் கூறியவர் யார் தெரியுமா? http://www.newmannar.lk/2017/07/nws.html

Leave A Reply

Your email address will not be published.