ஆட்டிறைச்சிக்கு பதிலாக நாய் இறைச்சி; சென்னையில் அதிர்ச்சி!

0

சென்னையில் செயல்பட்டு வரக்கூடிய சில பிரியாணி கடைகள், தங்களது தயாரிப்பான பிரியாணியில் அவ்வப்போது ஆட்டிறைச்சிக்கு பதிலாக நாய் கறி உள்ளிட்டவற்றை சேர்ப்பதாக புகார் கிளம்பிய நிலையில் குறிப்பிட்ட சில கடைகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டு பல அதிர்ச்சிகர உண்மைகள் வெளிவந்து சென்னைவாழ் மக்களை பீதியடைய செய்தது.

இந்த நிலையில், நேற்றைய தினம் ஜோத்பூரிலிருந்து மன்னார்குடிக்கு செல்லும் விரைவு ரயிலில் அழுகி இறைச்சி கொண்டுசெல்லப்படுவதாக உணவு பாதுகாப்பு துறைக்கு கிடைத்த ரகசிய புகாரினையடுத்து சென்னை எழும்பூர் நிலையில் குறிப்பிட்ட ரயிலில் கொண்டுவரப்பட்ட 1800 கிலோ இறைச்சிகளை கைப்பற்றினர். மேலும், ரயிலில் கொண்டுவரப்பட்ட இறைச்சி நாய்கறியாக இருக்கலாம் என்ற சந்தேகம் கிளம்பிய நிலையில் அவை சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அதே சமயம், தாங்கள் ஆட்டிறைச்சிக்கே ஆர்டர் கொடுத்திருந்ததாகவும், இடையில் ஏதேனும் சதி நடந்திருக்கலாமென சந்தேகிப்பதாகவும் தெரிவித்துள்ளனர் கறி விற்பனையாளர்களான அப்துல் ரஷீத் மற்றும் முகம்மது ரபி உள்ளிட்டோர்.

Leave A Reply

Your email address will not be published.