இணையத்தில் வெளியானது சர்கார் படம் ! இளையதளபதியின் தலையில் இடியை இறக்கிய தமிழ் ராக்கர்ஸ்

0

ஏஆர் முருகதாஸின் இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடித்த சர்கார் திரைப்படம் உலகளாவிய ரீதியில் இன்று திரைக்கு வந்துள்ளது .

இந்த படம் விஜய் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ள போதிலும் எதிர் மறையான விமர்சனங்களும் வெளிவந்து கொண்டிருக்கின்றன .

கதை திருட்டு சர்ச்சையில் இருந்து மீண்டு ஒருவாறு திரைக்கு வந்துள்ள சர்க்கார் படத்திற்கு மேலும் ஒரு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது .

படம் வெளியாகியுள்ள இன்றைய தினமே சர்கார் படம் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் வெளியாகியுள்ளது .

சர்கார் படத்தின் எச் டி பிரிண்ட் தமது இணையத்தில் வெளியிடப்படும் என்று ஏற்கனவே தமிழ் ராக்கர்ஸ் தெரிவித்திருந்தது .

சர்க்கார் படத்தை இணையத்தில் தமிழ் ராக்கர்ஸ் வெளியிடக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது .

எனிலும் நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி தமிழ் ராக்கர்ஸ் அதிரடியாக சர்கார் திரைப்படத்தினை இன்றைய தினமே வெளியிட்டு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது .

தமிழ் ராக்கர்ஸ் இன் அதிரடி செயலினால் படக்குழுவினர் அதிர்ச்சியில் உறைந்துள்ளார்கள் .பல கோடிகளை கொட்டி படத்தினை எடுத்தவர்களுக்கு தமிழ் ராக்கர்ஸ் வில்லனாக மாறியுள்ளது .இந்த சம்பவத்தினால் விஜய் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளார்கள் .

Leave A Reply

Your email address will not be published.