இந்தியன் 2 படத்தில் கமலுக்கு வில்லனாக சிம்பு?

0

கமல் நடிக்க ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 படத்தின் வேலைகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், படத்தில் நடிகர் சிம்பு போலீஸ் அதிகாரியாக வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. #Indian2 #KamalHaasan #STR

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடங்களில் நடித்து வெளியான படம் இந்தியன். நல்ல வரவேற்பைபெற்ற இந்த படத்தில் கமல் சுதந்திர போராட்ட வீரராகவும், லஞ்சம் வாங்கும் மகனாகவும் நடித்திருந்தார்.

நேர்மையே கொள்கையாக வைத்து இருக்கும் தந்தை தனது கொள்கைக்கு எதிராக இருக்கும் மகனையே கொல்வதுபோல படத்தின் முடிவு அமைந்து இருந்தது.

1996-ஆம் ஆண்டு வெளியான இந்தியன் படத்தின் அடுத்த பாகமாக இந்தியன் 2 உருவாக இருக்கிறது. கடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதற்கான அறிவிப்பு வெளியானது. கமல் நடிக்க ‌ஷங்கர் இயக்குகிறார்.

‌ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் 2.0 படம் இந்த மாத இறுதியில் வெளியாக உள்ளது. அந்த படம் வெளியான சில நாட்களில் டிசம்பர் முதல் வாரத்தில் இந்தியன் 2 படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளனர். இதற்காக செட் அமைக்கும் பணி கடந்த வாரம் தொடங்கியது.

இந்தியன் 2 படத்தில் கமலுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கலாம் என்று செய்திகள் வெளியாகின. ஆனால் தற்போதைய தகவல்படி கமலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார் என்றும் மேலும் துல்கர் சல்மான், சிம்பு ஆகியோரும் நடிக்க உள்ளதாக தெரிகிறது.

சிம்பு இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்றும், கமலுக்கு வில்லனாக வருவார் என்றும் செய்தி வருகிறது. ‌ஷங்கர் படங்களில் கதாநாயகர்களுக்கு சமமாக வில்லன்களுக்கும் முக்கியத்துவம் தரப்படும். இந்தியன் முதல் பாகத்தில் தந்தை கமலுக்கு மகன் கமலே வில்லனாக அமைந்திருப்பார்.

முதல் பாகத்தின் கதையே லஞ்சத்துக்கு எதிரானதாக இருந்தது. இரண்டாம் பாகம் ஊழலுக்கு எதிரான படமாக இருக்கும் என்கிறார்கள். 21 ஆண்டுகள் கழித்து திரும்பும் சேனாபதி, நாடு முழுவதும் பரவியுள்ள ஊழலை ஒழிப்பதே கதை என்கிறார்கள்.

கமல் தனது கட்சியின் கொள்கைகளில் முக்கியமாக ஊழல் ஒழிப்பையே முன்மொழிந்து வருகிறார். கமலின் தீவிர அரசியலுக்கும் அவரது கொள்கைகளுக்கும் உதவும் வகையிலேயே கதை, வசனம் அமைந்திருக்கும் என்கிறார்கள். #Indian2 #KamalHaasan

Leave A Reply

Your email address will not be published.