இரத்த ஆறை பெருக்கெடுக்க மேற்கொண்ட சதியைத் தடுத்துள்ளது உச்சநீதிமன்றம் – சஜித்

0

நாட்டில் நீதி, சட்டத்தின் ஆட்சி மற்றும் ஜனநாயகம் உச்ச நீதிமன்றினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிறேமதாச தெரிவித்தார்.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு சர்வாதிகார ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும், நீதிமன்ற வளாகத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த சஜித கூறினார்.

அதேவேளை சட்டவிரோதமான ஆட்சியை கைப்பற்றி நாட்டில் இரத்த ஆறை பெருக்கெடுக்க மேற்கொண்ட சதியும் உச்ச நீதிமன்றினால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த மகத்தான வெற்றியை மக்கள் மிகவும் அமைதியாகவும், ஏனையவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் கொண்டாடுமாறும் சஜித் ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட மைத்ரியின் தீர்ப்பிற்கு எதிராக வீதிக்கு இறங்கியிருந்த கட்சிகளின் ஆதரவாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நீதிமன்றின் சுயாதீனத்தன்மை இன்றைய நீதிமன்றின் தீர்ப்பின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சஜித் பிறேமதாச தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.