இறந்தவரின் உடலை ஒப்படைக்க பட்டாசுகளை லஞ்சமாக பெற்ற ஊழியா்கள் ! ஈனப்பிறவிகள்

0

லஞ்சம் அதற்கு மட்டும் இந்த உலகில் பஞ்சம் இல்லை .பிறப்பில் இருந்து இறப்பு வரை அனைத்திற்கும் லஞ்சம் கொடுக்கும் துர்ப்பாக்கிய நிலையே காணப்படுகின்றது .

ஒருவரின் இறப்பில் கூட தமது சுயநலத்தினை நிறைவேற்றிக்கொள்ளும் இழிவான செயல்களும் இடம்பெற்றுக்கொண்டுதான் இருக்கிறது .இறந்தவரின் உடலினை ஒப்படைப்பதற்கு பட்டாசுகளை இலஞ்சமாக பெற்றுக்கொண்ட கொடுமை இந்தியாவில் இடம்பெற்றுள்ளது .

தமிழ்நாட்டின் மதுரை மாவட்ட அரசு மருத்துவமனையில்
பணிபுரியும் ஊழியர்களே இந்த மனிதாபிமானம் அற்ற இழிந்த செயலினை புரிந்துள்ளார்கள் .

மதுரையைச் சோ்ந்த ராஜேந்திரன் என்பவா் ராஜாஜி அரச மருத்துவமனையில் சிகிச்சைக்காக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காத நிலையில் இறந்துள்ளார் .

இறந்தவரின் உடல் பிரேத பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கும் போது மருத்துவமனை ஊழியா் ஒருவா் லஞ்சம் கேட்டுள்ளாா்.

நேற்றைய தினம் தீபாவளி என்பதனால் பணத்திற்கு பதிலாக பட்டாசுகளை தருமாறு இந்த ஊழியர் இறந்தவரின் உறவினர்களிடம் கேட்டுள்ளார் .

இலஞ்சம் கொடுக்காமல் உடலை பெற்றுக்கொள்ள முடியாது என்பதனை உணர்ந்த உறவினர்கள் வேறு வழியில்லாமல் 1,௫௦௦ ரூபாவுக்கு பட்டாசுகளை வாங்கி கொடுத்துவிட்டு உடலை பெற்றுள்ளனர் .

Leave A Reply

Your email address will not be published.