இலங்கையின் பிரபல கிரிக்கெட் நட்சத்திரத்தை களமிறக்கும் மகிந்த ! கலக்கத்தில் எதிர்க்கட்சிகள் ! யார் அந்த வீரர் ?

0

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் திலகரட்ன டில்ஷான் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மஹிந்த ராஜபக்ச தலைமையிலான பொதுஜன பெரமுன கட்சியில் இணைந்து டில்ஷான் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

களுத்துறையில் அவரது மாவட்டத்திலேயே அவர் போட்டியிடவுள்ளார்.

இதுவரையிலும் இது தொடர்பில் கலந்துரையாடல் மேற்கொள்வதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

எப்படியிருப்பினும் இது தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பிரதானியிடம் ஊடகமொன்று வினவிய போது, அவ்வாறான தகவலை தற்போது உறுதி செய்ய முடியாதென குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.