இலங்கை சிங்களுவர்களுக்கே உரித்தான நாடு ! முக்கும் முத்தையா முரளிதரன் ! நக்கி பிழைக்கும் நயவஞ்சகன்

1

இலங்கை நடந்து ஒரு பௌத்த நாடு .இந்த நாடு சிங்களவர்களுக்கே உரித்தானது என்று சாதனை சூழல் பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார் .

இது குறித்து முரளிதரன் BBC சந்தேசிய சிங்கள சேவைக்கு வழங்கிய செவ்வியில் , இந்நாட்டில் 80%மக்கள் சிங்கள பெளத்தர்கள். அவர்களுக்கே இந்நாடு சொந்தமானது .

தமிழ் அரசியல்வாதிகள் உரிமை பற்றி கதைக்கிறார்கள் , பின்பு கடந்த காலம் பற்றி கதைக்கிறார்கள். அல்லது ஜனநாயகம் பற்றி கதைக்கிறார்கள்.

ஒருவரும் மக்களின் கஷ்டங்கள் பற்றி கவலைப்படுவது இல்லை.உரிமை ,ஜனநாயகம்,சட்டம் என்பதெல்லாம் உண்மையில் மக்களுக்கு இரண்டாம்பட்சமானது தான்.

மக்களின் எதிர்பார்ப்பு 3 நேர உணவு ,பிள்ளைகளுக்கான கல்வி போன்ற அடிப்படையான விடயங்களே என்று தெரிவித்துள்ளார் .

முத்தையா முரளிதரன் தன்னை ஒரு தமிழனாக அடையாளப்படுத்தி கொள்ள விரும்புவதில்லை ,அவர் தமிழ் மொழியில் பேசுவதை விரும்புவதில்லை .அவரது வாயில் இருந்து வரும் வார்த்தைகள் முக்கால்வாசி சிங்கள வார்த்தைகளே .

தன்னை ஒரு தமிழனாக அடையாளப்படுத்திக்கொள்ள விரும்பாத ஒருவருக்கு தமிழ் மக்களின் உணர்வுகள் , வலிகள் எங்கே புரிய போகின்றது ,

இத்தனை ஆண்டுகள் இலங்கை கிரிக்கெட் அணியில் முரளிதரன் எவ்வாறு தாக்கு பிடித்தார் என்பது இப்போது அப்பட்டமாக தெரிகின்றது .

முரளிதரன் போன்ற நக்கி பிழைக்கும் நயவஞ்சக கயவர்கள் தமிழினத்தின் சாபக்கேடு .முரளியின் இந்த கருத்து தமிழ் மக்களை கொந்தளிக்க செய்துள்ளது .

1 Comment
  1. Suganthan says

    சிங்கள ஊடகத்தில் முத்தையாவின் கருத்துகளுக்கு ‘ஏழைகளுக்கு உதவுவர்கள் பக்கம் நான் – முரளிதரன்’ என்ற தலைப்பு கொடுத்து இருக்கிறார்கள்.
    தமிழ் ஊடகத்தில் அதே கருத்துகளுக்கு ‘இலங்கை சிங்களுவர்களுக்கே உரித்தான நாடு ! முக்கும் முத்தையா முரளிதரன் ! நக்கி பிழைக்கும் நயவஞ்சகன்’ என்ற தலைப்பு கொடுத்து இருக்கிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.