இலங்கை பாராளுமன்றினுள் கத்தியுடன் நுழைந்த பாராளுமன்ற உறுப்பினர் ! ரவுடிகளின் அட்டகாசம் ! படங்கள் உள்ளே

0

இன்று இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின் போது பிரதமர் மகிந்த தரப்பு உறுப்பினர்களுக்கும் முன்னாள் பிரதமர் ரணில் தலைமையிலான உறுப்பினர்களுக்கும் இடையில் கடுமையான வாய்த்தர்க்கம் மற்றும் கைகலப்பு ஏற்பட்டது .

ரணில் தலைமையிலான ஐக்கியதேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தேவரே பெரும கையில் கத்தியுடன் மகிந்த தரப்பு உறுப்பினர்களுடன் கைகலப்பில் ஈடுபட்ட அதிர்ச்சி புகைப்படங்கள் வெளியாகியுள்ளன .

இன்றைய பாராளுமன்ற அமர்வின் போது மகிந்த தரப்பு உறுப்பினர் ஒருவர் சபாநாயகரின் ஒலிவாங்கியை பிடுங்கி எறிந்தார் .அத்துடன் மகிந்த தரப்பு உறுப்பினர்கள் சபாநாயகரை நோக்கி கடதாசி போடும் குப்பை கூடையை எறிந்தமை குறிப்பிடத்தக்கது .

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களின் பண்பில்லாத செயல் நாட்டு மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது .இலங்கை நாடாளுமன்றில் இருக்கும் பலர் ரவுடிகளாக இருக்கின்றனர் .

நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் நூறுக்கு மேற்பட்ட உறுப்பினர்கள் கபொத சாதாரண தர பரீட்சியில் சித்தியடையாதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது .

 

Leave A Reply

Your email address will not be published.