உயர்நீதிமன்ற உத்தரவுக்குப் பின்பே தேர்தல் ! மைத்திரியின் தலையில் மத்தளம் அடித்தார் தேர்தல் ஆணையாளர்

0

நாடாளுமன்றக் கலைப்புத் தொடர்பான உயர்நீதி மன்றின் கட்டளைக்குப் பின்னரே பொதுத் தேர்தல் தொடர்பான அறிவிப்புக்களை வெளியிட முடியும் என்று தேர்தல்கள் ஆணைக் குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார் என்று சிங்கள ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

2019ஆம் ஆண்டு ஜனவரி 5 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்த ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார் என்று செய்திகள் வெளியாகும் நிலையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

19ஆவது அரசமைப்புத் திருத்தத்தை மீறி ஜனாதிபதி நாடாளுமன்றைக் கலைத்துள்ளார். அதனால் ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவிப்புக்கு எதிராக உயர் நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்யப்படும். அந்த மனு மீதான உயர் நீதிமன்றின் கட்டளை வரும் வரை பொதுத் தேர்தல் தொடர்பான அறிவிப்புக்களை வெளியிடமுடியாது என்று தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் குறிப்பிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.