ஊழியர்களுக்கு சிறுநீர் , கழிவறை நீரினை அருந்த கொடுத்த கம்பெனி ! அருவருப்பான சம்பவம்

0

கம்பனியில் பணியாற்றும் ஊழியர்கள் தவறு செய்தால் அவர்களது சம்பளத்தில் குறிப்பிட்ட தொகையை கழித்து தண்டனை வழங்கப்படுவது வழக்கம் .

அல்லது இடமாற்றம் செய்தல் , இடை நிறுத்துதல் போன்ற வேறு சில தண்டனைகள் வழங்கப்படுவது வழமை.

தனது கம்பெனியில் பணி புரியும் ஊழியர்கள் தவறு செய்தால் அவர்களை வித்தியாசமான முறையில் சீன கம்பெனி தண்டித்துள்ளது .

சீனாவில் உள்ள ஒரு உள்புற அலங்கார பொருட்கள் தயாரிக்கும் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு சிறு நீர் ,கழிவறை நீர் போன்றவற்றினை குடிக்குமாறு வற்புறுத்தி தண்டனை நிறைவேற்றுவது தொடர்பில் அதிர்ச்சியான செய்தி வெளிவந்துள்ளது .

சீனாவின் குயீஸோஹு மாகாணத்தில் இயங்கிவரும் இந்த தனியார் நிறுவனம் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் தமக்கு வழங்கப்பட்ட வேலையை குறிக்கப்பட்ட நேரத்தில் செய்து முடிக்க தவறும் பட்சத்தில் அவர்களுக்கு , சக ஊழியர்களின் கண் முன்னே சிறு நீர் , கழிவறை நீரினை பருக கொடுத்து தணடனை நிறைவேற்றுகின்றது .

இந்த நிறுவனத்தின் மனிதாபினமானம் அற்ற கொடிய தண்டனைகள் தொடர்பில் அந்த நிறுவனத்தில் பணியாற்றி விலகிய ஊழியர்கள் போட்டுடைத்துள்ளார்கள் .

தமக்கு வழங்கப்பட்ட அருவருப்பான தண்டனைகளை வீடியோவாக வெயிட்டமையினால் அந்த நிறுவனத்தின் உரிமை மீறல்கள் அப்பட்டமாக வெளிச்சத்துக்கு வந்துள்ளதுடன் அங்கு நடக்கும் கொடுமைகள் நிரூபிக்கப்ட்டுள்ளது .

இந்த சம்பவம் தொடர்பில் குறித்த நிறுவனத்தின் 3 மேல்நிலை அதிகாரிகள் கைது செய்யப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.