எமது ஒற்றுமையை எவராலும் பிரிக்க முடியாது! மஹிந்த

0

ஜனாதிபதியினால் எடுக்கப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானத்திற்கு மீண்டும் ஒருமுறை மரியாதை செலுத்துவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

புதிய அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கும் விதத்தில் ´மக்கள் மகிமை´ ஆர்ப்பாட்டப் பேரணி தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஆர்ப்பாட்ட பேரணியில் தொடர்ந்து கருத்து தெரிவித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, 3 வருடங்களும் 10 வருடங்களும் ரணில் விக்ரமசிங்கவுடன் கடமையாற்றியதன் பின்னரே ஜனாதிபதி இந்த வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானத்தை எடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கடமையாற்றுவது இலகுவான ஒரு விடயம் எனவும் நாட்டின் எதிர்கால குழந்தைகளின் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவே ஜனாதிபதி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாட்டின் எதிர்கால நலனுக்காக கடமையாற்றப் போவதாகவும், தான் ஜனாதிபதியாக இருந்திருந்தால் பிரதமர் பதவியில் எவ்வித மாற்றமும் செய்யாது தொடர்ந்தும் அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்திருப்பதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பலரது அர்ப்பணிப்புடன் அமைக்கப்பட்டுள்ள தற்போதைய அரசாங்கத்தை எக்காரணத்திற்காகவும் யார் நினைத்தாலும் பிரிக்க முடியாது எனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.