ஒரே நாளில் வடக்கு தமிழ் மக்களை உலுக்கிய மரணங்கள்!

0

மன்னார் தோட்ட வெளி ஜோசப் வாஸ் நகர் கிராம பகுதியில் உள்ள நீர்த்தேக்கத்தில் குளிக்கச் சென்ற சிறுவர்கள் இருவர் நீரில் மூழ்கி பரிதாபகரமாக பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த இரு சிறுவர்களும் அதே பகுதியைச் சேர்ந்த கனகராஜ் ரஜீத் (வயது -7) மற்றும் இந்தயூட் லிவிசன் (வயது-7) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

குறித்த நீர்த்தேக்கத்தில் குளிப்பதற்காகச் சென்ற சக சிறுவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் பொதுமக்கள் இணைந்து குறித்த சிறுவர்களின் உடலங்களை மீட்டனர்.

பொதுமக்களால் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார், விசேட தடவியல் நிபுணத்துவ பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நிலையில் வவுனியாவில் இருந்து வருகை தந்த விசேட தடவியல் நிபுணத்துவ பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டதோடு மீட்கப்பட்ட குறித்த இரு சிறுவர்களின் சடலங்களையும் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

எவ்வாறாயினும் குறித்த இரு சிறுவர்களின் சடலங்களும் கண்டு பிடிக்கப்பட்டு பல மணி நேரங்களின் பின்னரே பொலிஸார் வருகை தந்து சடலத்தை மீட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூன்று பல்கலைக்கழக மாணவர்களும் தென்னிலங்கையிலுள்ள நீர்நிலை ஒன்றில் பலியாகியமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த இரு சம்பவங்களும் வடக்கு மாகாண தமிழ் மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் கூறுகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.