ஓய்வூதியம் இழக்கும் தமிழ் எம்.பிக்கள் பட்டியல் ! மண் அள்ளிப்போட்ட மைத்திரி

0

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து அரசு பக்கம் தாவிய நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன், நாடாளுமன்ற உறுப்பினருக்கான ஓய்வூதி யத்தைப் பெறும் தகுதியை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சாந்தி சிறிஸ்கந்தராசா, சிவமோகன், சார்ஸ் நிர்மலநாதன், சிறி நேசன் ஆகியோரும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், காதர் மஸ்தான் ஆகியோரும் ஓய்வூதியத்தை இழக்கின்றனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வர்த்தமானி அறிவிப்பு உயர் நீதிமன்றுக்குச் சென்று நீக்கப்படாமல் நடைமுறைப் படுத்தப்பட்டால் இவர்கள் ஓய்வூதியத்தை இழக்கும் நிலை ஏற்படும்.

அத்துடன், இவர்கள் மீளவும் நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டால் ஓய்வூதியத்துக்கான காலத்துக்குள் இந்தக் காலப்பகுதியும் சேர்க்கப்படும். நாடாளுமன்ற உறுப்பினராக 5 ஆண்டுகள் நிறைவு செய்யாதோருக்கு ஓய்வூதியம் வழங்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.