‘கஜா’ புயல் – டெல்டா மாவட்டங்கள் பெரும் அழிவு! படங்கள் இணைப்பு!

0

தமிழகத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கிய ‘கஜா’ புயல் காவிரி டெல்டா மாவட்டங்களை பெரும் அழிவிற்குட்படுத்தியுள்ளது.

புயல் கரையை கடந்தபோது, நாகப்பட்டினம், காரைக்கால் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் கடற்கரைகளில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஏராளமான படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி சேதம் அடைந்துள்ளன. பல படகுகள் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டுள்ளன.

புயலின் கோரத்தாண்டவத்துக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. ஏராளமான மின் கம்பங்களும் சாய்ந்து விழுந்தன. தொலைபேசிக் கோபுரங்களும் சரிந்துள்ளன.

வர்த்தக நிலையங்கள், வாகனங்கள் என்பனவும் சேதமடைந்துள்ளன. வீதிகளில் சாலைகளில் மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், பல கிராமங்களில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது. பல ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதுடன், பெறுமதியான பயிர்ச்செய்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

புயல்-மழையால் நாகை மாவட்டத்தில் மிக அதிக அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. வீடுகள் இடிந்து விழுந்தும் மரங்கள் சாய்ந்தும் தமிழகம் முழுவதும் 49 பேர் பலியாகி உள்ளனர்.

புயல்-மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் சீரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் முகாமிட்டு சீரமைப்பு பணிகளை தீவிரப்படுத்தி வருகிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.