கஜேந்திரகுமார் சின்னப்பையன் அவர் கதைப்பதை கணக்கில் எடுக்க தேவையில்லை ! சீறும் ஒட்டுக்குழு சித்தார்த்தன்

0

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் சின்னப் பையன். அவர் கதைப்பதை யாரும் சீரியஸாக எடுக்கத் தேவையில்லை எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று முன் தினம் நடத்திய செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில் –

தமிழ் மக்கள் பேரவையில் புளொட் உட்பட பல கட்சிகளும் பொது அமைப்புக்களும் அங்கம் வகிக்கின்றன. அதேபோன்று கஜேந்திரகுமாரின் கட்சியும் அங்கம் வகிக்கின்றது. இந்த நிலையில் அந்தப் பேரவையிலிருந்து எங்களை வெளியேற்றுமாறு கஜேந்திரகுமார் கோரியுள்ளமையை நாங்களும் அறிந்து கொண்டிருக்கின்றோம்.

ஆனால் பேரவையிலிருந்து வெளியேறுமாறு பேரவையைச் சேர்ந்த யாரும் எமக்குத் தெரிவிக்கவில்லை. நாங்கள் தொடர்ந்தும் அங்கம் வகித்துக்கொண்டே இருக்கின்றோம். பேரவையின் எழுக தமிழ் உட்பட பேரவையின் அனைத்துச் செயற்பாடுகளிலும் நாங்கள் ஆதரவு அளித்திருக்கின்றோம். எம்மைப் போன்று சுரேஷ் பிரேமச் சந்திரனின் பங்கும் அளப்பரியது. ஆகவே பேரவை என்பது தனியே ஒரு கட்சியல்ல. அது பல கட்சிகள், பொது அமைப்புக்கள் இணைந்த கூட்டு ஆகும். ஆகவே அது ஒருவருக்கோ அல்லது ஒரு கட்சிக்கோ சொந்தமானது அல்ல.

ஆக கஜேந்திரகுமார் தான் எம்மை வெளியேற்றுமாறு கோரியிருக்கின்றார். அவர் ஒரு சின்னப் பொடியன். அவரின் கருத்துக்களைச் சீரியஸாக எடுக்கத் தேவையில்லை. எம்மை வெளியேற்று என்று கூறும் அவர் தான் என்ன செய்யப் போகின்றார் என்பதை இன்னும் மக்களுக்குச் சொல்லவில்லை. ஆகவே முதலில் தன்னுடைய நிலைப்பாட்டை அவர் மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்.

தாம் எதனையுமே செய்யாமல் அல்லது தெரிவிக்காமல் மற்றயவர்களை விமர்சிப்பதனூடாகத் தமிழ் மக்களுக்கு எதனையும் பெற்றுக் கொடுக்கலாம் அல்லது தன்னுடைய அரசியல் பயணத்தை தொடர்ந்து முன்னெடுக்கலாமென்று அவர் நினைக்கக் கூடாது. அவ்வாறு அவர் கருதுவதும் தவறு தான்.”

 

Leave A Reply

Your email address will not be published.