சிறிலங்கா நாடாளுமன்றம் எதிர்வரும் 23ஆம் நாள் வெள்ளிக்கிழமை கூடவுள்ள நிலையில் விசேட கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு சபா நாயகர் அழைப்பு விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் அங்கத்துவம் வகிக்கும் சகல கட்சிகளுக்கும் சபாநாயகர் இந்த விசேட அழைப்பினை விடுத்தார்.
கடந்த திங்கட்கிழமை நாடாளுமன்றம் கூடியபோதும் அசம்பாவிதங்கள் எதுவும் நடகவில்லை என்பதுடன், சில நிமிடங்கள்வரையே நடந்த நாடாளுமன்ற அமர்வுகளை பிரதி சபா நாயகர் 23ஆம் நாளுக்கு ஒத்திவைத்தார்.
இந்த நிலையிலேயே சபா நாயகர் கரு ஜெயசூரிய வெள்ளிக்கிழமை காலை சகல கட்சித் தலைவர்களுக்குமான விசேட கூட்டத்திகு அழைப்பு விடுத்தார்.