கட்டுநாயக்க விமான நிலையம் மீது கரும்புலிகள் தாக்குதல் ! கருணா வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல் !

0

தமிழீழ விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் அணியினரால் மேற்கொள்ளப்பட்ட கட்டு நாயக்க மீதான தாக்குதலில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்குத் தொடர்பு இருப்பதாக கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

இந்த பரபரப்புத் தகவலை கருணா தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதன் பிரகாரம்,

“புலிகளுடன் ஒருபோதும் ஒப்பந்தங்களைச் செய்யவில்லை என ரணில் கூறுகிறார்… 2001 ம் ஆண்டு கட்டுநாயக்க விமான நிலைய தாக்குதல் என்ன? அது விடுதலைப் புலிகளுக்கும் சில கொழும்பு அரசியல்வாதிகளுக்கும் வெளிநாட்டு புலனாய்வுத்துறைக்கும் இடையிலான உடன்படிக்கையின் பாகமாகும். நான் இன்னும் உயிரோடு இருக்கிறேன்” என்று முரளிதரன் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் முன்னாள் பிரதி அமைச்சரான விநாயகமூர்த்தி முரளிதரன் தமிழீழ விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத்தின் சிறப்புத் தளபதியாயிருந்து பிரிந்தவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

காந்தள் மலர்கள் – மாவீரர் நாளை நினைவுகூறும் அற்புதமான கவிதை, காட்சிகளுடன்.

Leave A Reply

Your email address will not be published.