கணவர்கள் உயிரோடு இருக்கும் போதே விதவையாக மாறிய மனைவிகள் ! வினோத சம்பவம்

0

இந்தியாவில் கணவர்கள் உயிரோடு இருக்கும் போதே 22 பெண்கள் விதவை பென்ஷன் வாங்கி வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசத்தில் உள்ள பட்ஸ்கஞ்ச் கிராமத்தை சேர்ந்த ஆண் ஒருவர் 10 நாட்களுக்கு முன்னர் தனது மனைவி செல்போனில் உள்ள மெசேஜை பார்த்துள்ளார்.

அதில் வங்கியிலிருந்து ரூ.3000 மாதா மாத மனைவிக்கு வருவதை கண்டுப்பிடித்துள்ளார்.

இதையடுத்து வங்கி கணக்கை பார்த்த போது அந்த பணம் விதவை பென்ஷன் என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.

அதே போல தனது மாமியார், மைத்துனிக்கும் கணவன் உயிரோடு இருக்கும் போதே பென்ஷன் வருவது தெரியவந்தது.

இது குறித்து மாவட்ட ஊராட்சி அதிகாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அவர் நடத்திய விசாரணையில் அந்த ஊரில் 22 பெண்களுக்கு இப்படி விதவை பென்ஷன் வருவது தெரியவந்தது.

இது தொடர்பாக அரசு அதிகாரி ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.