கருணாகரன்: ஒரு கழுதை புலியின் கதை (ஈபிடிபி சந்திரகுமாரின் தோழர்)

0

2015 சனவரிப் புரட்சியின் தொடர்ச்சியாக நடக்கும் ஒரு நிகழ்வே இன்று இல.பாராளுமன்றத்தில் நடக்கும் குழப்பங்கள். இதுவரையில் இக்குழப்பநிலமை சனநாயகத்தை மேலும் பலப்படுத்தியிருக்கிறது. முற்போக்கு மற்றும் நடுநிலமையான பத்திரிகையாளராக தன்னைகாட்டிக்கொள்ளும் கருணாகரன் சிவராசா என்ற “பத்திரிகையாளர்” இப்போது எழுதிவரும் கட்டுரைகள் சனவரி 2015 புரட்சிக்கு எதிராக மீண்டும் மகிந்த ராச்சியத்தை நிறுவுவதற்காக மகிந்தவுக்காதரவாக சாதுரியமாக இயங்குவதை அவதானிக்கலாம். கருணாகரனைப் புரிய அவரின் வரலாற்றை அறியவேண்டும்.

பெரும்பாலான ஈரோஸ் இயக்ககாரர்கள் கழுதைப்புலிகளை (Hyena) போன்றவர்கள். சிங்கம், புலி போன்ற மிருகங்களை அண்டி, பின்தொடர்ந்து அவை வேட்டை ஆடி விட்ட மிச்சங்களை தின்று உயிர்வாழ்பவை கழுதைப்புலிகள். செத்த உடல்களையும் மனித புதைகுழிகளை தோண்டியும் தின்பவை.

ஈரோஸ் இயக்கத்திலிருந்து வந்த சிவராசா கருணாகரனின் சுயநலன் அடிப்படையிலான பச்சோந்தி தனத்தையும் சந்தர்ப்ப வாதத்தையும் இப்பின்னணியிலேயே விளங்கிக்கோள்ளலாம். ஈரோஸ் இயக்கம் புலிகளால் உள்வாங்கப்பட்டபிறகு 1990 இலிருந்து 2019 வரை கருணாகரன் புலிகளின் பிரச்சார பத்திரிகைகளில் சம்பளத்துக்கு வேலைசெய்கிறார். புலிகளின் வெளிச்சம் இதழின் பிரதம ஆசிரியராக பிரபாகரனை நேர்காணல் கண்டவர். புலிகள் அவருக்கு வசதியான சம்பளத்தையும் வழங்கினார்கள்.

2029இற்குப் பிறகு இனி புலிகளைவைத்து பிழைக்கமுடியாததை அறிந்த கருணாகரன் புலி விமர்சனம், புலியெதிர்ப்பு, இடதுசாரி முற்போக்கு முதலிய பச்சோந்தி வண்ணங்களில் இயங்குகிறார். 2009 மேயின் பின் கருணாகரன் காலச்சுவட்டில் எழுதிய இறுதிப்போரில் நடந்ததென்ன என்ற சிறப்பான கட்டுரை அவரது புதுவேசத்தை கடடியம் கூறியது இக்காலம் 2009 இலிருந்து 2015 சனவரிப்புரட்சிவரையான காலம். புலிகளை நெருங்குவதற்கு தன்னுடைய பாலகுமார் போன்ற ஈரோஸ் தொடர்புகளை பாவித்ததுபோல் மகிந்த ராச்சியத்தை நெருங்க இவர் தனது மனைவியின் சகோதரரான EPDP சந்திரகுமாரை பாவித்தார். வெள்ளாளரான கருணாகரன் காதலித்து ஒடுக்கப்பட்ட சாதியைச்சேர்ந்தவரை திருமணம் செய்தார். சந்திரகுமார் குடும்பம் ஒடுக்கப்பட்டதாயினும் வசதியானது. சந்திரகுமாரின் தந்தை அவர்களின் சமூகத்தில் வந்த பட்டதாரியும் இலங்கை சிவில் சேவை உயர் அதிகாரியும் ஆவார். சந்திரகுமாரின் 2 சகோதரிகள் MBBS மருத்துவர்கள்.

1994 ல் EPDP ன் 9 MP களில் ஒருவராக டக்ளஸால் தேர்ந்தெடுக்கப்பட்ட சந்திரகுமார் 2000 ம் காலப்பகுதியில் புலிகளின் மிரட்டலுக்கு பயந்து டக்ளஸை கைவிட்டு லண்டனில் குடும்பத்தோடு செற்றிலாகிறார். இருந்தும் டக்ளஸ் அவரை 2010 ல் அழைத்து குறைந்த விருப்புதெரிவு வாக்குகள் எடுத்தபோதும் MP ஆக்குகிறார். புலி இல்லாத 2010 — 2015 காலம் இன்றைய சம்பந்தனுக்கு சுமந்திரன் போல டக்ளஸுக்கு சந்திரகுமார் இருந்தார்.

இக்காலம்தான் கருணாகரன் வாழ்வின் பொற்காலம். டக்ளசின் நிழலில் சந்திரகுமார் ஜொலிக்க சந்திரகுமாரின் நிழலில் கருணாகரன் ஜொலித்தார். அப்பட்டமான அதிகாரபோதைக்கு கருணாகரன் பலியானது இக்காலந்தான். கருணாகரன் வன்னி குறுநில மன்னரல்ல. அதற்குமேல். அவரைப்பிடித்தால் எதுவும் சாதிக்ககூடிய நிலையிருந்தது. ஈழத்தில் நடந்த முதலாவது “புலியெதிர்ப்பு” இலக்கிய சந்திப்பை நிர்மலா சகோதரிகளோடு வெற்றிகரமாக கருணாகரன் நடத்திக்காட்டினார்.

இக்காலத்தில் சந்திரகுமார் கிளிநொச்சிக்கு வருகிற பெரும்பாலான நாட்களில் நாமல் ராஜபக்ச அவருடனிருந்தார். பாராளுமன்ற குழுக்களின் பிரதித்தலைவரான சந்திரகுமாரின் அலுவலகத்தில் 75 000 மாத சம்பள பதவியும் கருணாகரனுக்கிருந்தது. இந்த சொத்து சுகம் அதிகாரத்தை 2015 சனவரிப்புரட்சி(கருணா அண்ணாவுக்கு இது “சதிப்புரட்சி”) கருணாகரனிடமிருந்து பறித்ததை அவரால் தாங்கமுடியவில்லை. தொடர்ந்த 2015 ஆகஸ்ட் பொதுத்தேர்தலில் EPDP ல் டக்ளஸ் மட்டுமே MP ஆனார்.

இரவோடு இரவாக கருணாகரன் மதியுரைஞராக யோசித்தார். அவர் அறிவுக்கு இனி புலிபுராணம் பாடினால்தான் மச்சான் MP ஆகலாம் என்று உய்த்தறிந்தார். “நான் ஸ்கீம் போட்டுத்தாறன். அதன்படி நட மச்சான்” என்றார். சந்திரகுமார் டக்ளஸை விட்டு விலகி தமிழ்த்தேசிய அரசியல் செய்யவுள்ளதாக அறிவித்து தோழருக்கு முதுகில் குத்தி தனிக்கட்சி தொடங்கினார்.

முதலில் மதுவருந்தாத மதியுரைஞரான கருணாகரன் சுமந்திரனுடன் பேச்சுவார்த்தை செய்யமுயன்றார். மச்சானுக்கு தமிழரசுக்கட்சியில் ஒரு seat எடுப்பதே இதன் நோக்கம். இக்காலத்தில் சுமந்திரனையும் சம்பந்தனையும் போற்றிப்புகழ்ந்து கருணாகரன் எழுதிய பத்திகள் கட்டுரைகள் இதற்கு சாட்சி. நல்ல முடிவு சுமந்தி சம்பந்தத்திடமிருந்து வரவில்லை. விளைவு கடும் சம்பந்தர் விரோத எழுத்து. இன்றும் சுமந்திரனை சாடி எழுத கருணாகரனுக்கு முதுகெலும்போ துணிவோ இல்லை.

சந்திரகுமாரும் கருணாகரனைப்போல பன்முக திறமைகளும் மதிநுட்டமும் உடையவராயினும் கருணாகரனைப்போலவே கழுதைப்புலியும் பச்சோந்தியுமாவார். EPRLF இலிருந்து டக்ளஸ் வெளியேறியபோது அல்லது வெளியேற்றப்பட்டபோதோ அல்லது பிற்காலத்திலோ EPRLF வன்னிப்பொறுப்பாளராக (தோழர் றேகன் புலிகளால் கொல்லப்பட்டபின்) பத்மநாபாவால் வன்னிப்பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட தோழர் அசோக் என்ற சந்திரகுமார் பின்னாளில் டக்ளஸ் விசுவாசியானார். சந்திரகுமார் இரு தடவைகள் டக்ளஸின் முதுகில் குத்தி துரோகமிளைத்துள்ளார். 1.கி.பி 2000ம் களில் தோழரைவிட்டு லண்டன் ஓடியது. 2.கி.பி 2015 செப்டம்பரில் தனிக்கட்சி தொடங்கியது.

முக்கியமான இடைக்கதை: 2010-2015 காலத்தில் தோழர் நெகிழ்வாயிருந்தார். சந்திரகுமார் திட்டமிட்டு சொத்து சேர்த்தார்.
ஒரு சதமும் செலவில்லாமல் கிளிநொச்சி கனகபுரம் Bar ம் வன்னி எரிபொருள் நிலையமும் சந்திரகுமாரின் உரிமையானவை நாம் அறிந்தவை. அறியாமல் சேர்த்த சொத்துக்கள் இனித்தான் வரவேண்டும். கடைசியாக கிடைத்த உறுதிப்படுத்தப்பட்ட தகவல்படி புலிகள் வைத்திருந்த 100 ஏக்கர் காடழித்து உருவாக்கப்பட்ட கிளிநொச்சி தென்னந்தோட்டத்தை சந்திரகுமார் கொள்வனவு செய்யும் முயற்சியிலுள்ளார்.

2010-2015 காலத்தில் கருணாகரன் கிளிநொச்சியில் கட்டிய புது வீட்டை அங்கு விஜயம் செய்த இளம் மலேசியத் தமிழ் எழுத்தாளர் “ஒரு பண்ணையாரின் வீடு போலிருந்தது” என்று விபரித்துள்ளார்.

நான் நட்சத்த்திரன் செவ்விந்தியன் டக்ளஸின் பதற்றத்தை அனுதாபத்தோடுதான் பார்க்கிறேன். எம்மவரது சுப்பர் ஸ்ராறாக இருந்தவரல்லவா டக்ளஸ். உள்ளூராட்சி தேர்தல்களை அடுத்து தேவா அண்ணை/ டக்ளஸ் தோழர் கொடுத்த ஒலிவ் இலைகளை சுமந்திரன் தட்டிவிட்டது பெருந்துரோகம். அதற்கு சரியான காதல் சமிக்ஞைகளை சுமந்திரன் வழங்கியிருந்தால் தோழர் இம்முறை மகிந்தவுக்கு ஆதரவு கொடுத்திருக்கமாட்டார்.

சாராயம் விற்ற காசில் சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பில் அரசியல் செய்யும் சந்திரகுமாரையும் ஒரு அரசியல் வாதியாக புரிந்துகொள்ளலாம். மன்னிக்கலாம். ஆனால் ஒரு கவிஞராக புத்திசீவியாக பத்திரிகையாளராக கருணாகரனை மன்னிக்கமுடியாது. கிளிநொச்சியின் demography – மக்கள் தொகைவகையியல் சந்திரகுமாருக்கு தெரியாது.

கிளிநொச்சியிலுள்ள ஏறத்தாள 50% ஆன மலையக வம்சாவளி தமிழரை வைத்து “நாம் கேம் குடுப்பம் சம்பந்தனுக்கு” என்ற ஐடியாவை சந்திரகுமாருக்கு குடுத்தது கருணாகரன். சிறிதரன் MP க்கு எதிரான கருணாகரனின் போர்கள் கொள்கை அடிப்படையானதல்ல. தனது அதிகாரத்தை மீட்டெடுக்கும் Evil ஸ்கீம் அடிப்படையானது. மனோ கணேசன் கிளிநொச்சியில் காலூன்றுவது கருணாகரனுக்கு இன்னொரு அதிர்ச்சி.

– நட்சத்திரன் செவ்விந்தியன்

Leave A Reply

Your email address will not be published.