கள்ளக்காதலனுடனான உல்லாசத்துக்கு உலை வைத்த கணவன் ! போட்டு தள்ளிய மனைவி !

0

தமிழகத்தை உலுக்கிய அபிராமி சுந்தர் கள்ளக்காதல் விவகாரம் சற்று ஓய்வுக்கு வந்துள்ள நிலையில் மீண்டும் கள்ளக்காதலினால் கணவனை மனைவி கொலை செய்த சம்பவம் தமிழகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது .

தமிழ்நாட்டின் சேலம் கருப்பூர் அருகே உள்ள உப்புகிணறு என்னும் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார். இவருடைய மனைவி ஐஸ்வர்யா. இந்த தம்பதிகளுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த இந்த தம்பதிகளின் வாழ்க்கையில் திடீர் என்று அசம்பாவிதம் ஆரம்பித்தது .

ஐஸ்வர்யாவிற்கு அதேபகுதியில் மெக்கானிக் வேலை செய்யும் ரவி என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது நட்பாக பழக ஆரம்பித்தவர்கள் நாளைடைவில் கள்ளகாதலர்களாக மாறினார்கள் .

தமது காம இச்சையை தணித்து கொள்வதற்காக ரவியும் ஐஸ்வர்யாவும் அவ்வப்போது தனிமையில் உல்லாசம் அனுபவித்து வந்தனர் .

ரவியுடனான கள்ளத்தொடர்பினை அறிந்த கணவர் செல்வகுமார் தனது மனைவி ஐஸ்வர்யாவினை கண்டித்துள்ளார்.

கணவனின் கண்டிப்பை தட்டிக்கழித்த ஐஸ்வர்யா ரவியுடன் தொடர்ந்து உல்லாசம் அனுபவித்து வந்தார் .

ரவியுடனான தனது கள்ளக்காதலுக்கு கணவன் இடையூறாக இருப்பதை உணர்ந்த ஐஸ்வர்யா கணவனை போட்டு தள்ள முடிவு செய்தார் ,

கணவனை கொலை செய்ய முடிவு செய்த ஐஸ்வர்யா தோசை சட்டியால் கணவரின் தலையில் ஓங்கி அடித்தார்.பலமாக அடி பட்டமையினால் கணவர் சம்பவ இடத்திலே பலியானார்..

இறந்த கணவனின் உடலை கள்ளக்காதலன் ரவியின் உதவியோடு கிணற்றில் வீசிய ஐஷ்வர்யா தனது கணவனை காணவில்லை என போலீஸில் புகார் அளித்துள்ளார்.

ஐஸ்வர்யா அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணைகளை முடுக்கி விட்ட போலீசார் மனைவி ஐஸ்வர்யா மீது சந்தேகம் கொண்டனர் .

ஐஸ்வர்யாவினை விசாரித்த பொலிஸார் அவரின் வாயில் இருந்து உண்மையை கக்க வைத்தனர் .

இறுதியில் தானே கணவனை கொலைசெய்து கிணற்றில் வீசியதாக ஐஸ்வர்யா ஒத்துக்கொண்டார் .இதையடுத்து போலீஸார் கிணற்றிலிருந்த செல்வகுமாரின் உடலை மீட்டனர்.

கள்ளகாதலுக்காக தாலி கட்டிய கணவனை கொலை செய்த ஐஸ்வர்யா , அவரது கள்ளக்காதலன் ரவி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளார்கள்.

Leave A Reply

Your email address will not be published.